பக்கம்:விடையவன் விடைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#02 விடையவன் விடைகள்

392. தொண்ணுற்ருறு பிரபந்தங்களுக்கும் எடுத்துக்காட் டக நூல்கள் இருக்கின்றனவா ?

சிலவற்றிற்கே உண்டு. தொண்ணுற்ருறு பிரபந்தங்கள் என்ற கணக்கும் பெயரும் இலக்கணமும் இருக்கின்றனவே யன்றி, இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் இல்லை. சில பிரபந்தங்கள் இருந்ததாகவே தெரியவில்லை.

393. தொன்னூல், கன்னூல், சின்னூல்-இவற்றை இயற்றிய புலவர்கள் யார் யார் ? -

தொன்னுரலை இயற்றியவர் வீரமாமுனிவர்,என்ற பெஷிப் - பாதிரியார். நன்னுரலை இயற்றியவர் பவணந்தி முனிவர். சின்னூலாகிய நேமிநாதத்தை இயற்றியவர் குணவீர பண்டிதர். - -

- 394. 'யாதும் 26:37 யாவரும் கேளிர் என்ற அடி எந்த நூலில் உள்ளது ? பாடியவர் யார் ? . -

- புறநானூற்றில் வரும் ஒரு பாடலின் முதல் அடி அது. அதைப் பாடியவர் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர்.

395, சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா? - . - - சையத் அப்துல் காதர் என்பது அவர் இயற்பெயர், அதுவே சீதக்காதி ஆயிற்று. -

396. குதம்பைச் சித்தர் என்ற பெயருக்கு என்ன காரணம் ? - குதம்பை என்பது மகளிர் காதில் அணியும் ஆபரணம். அதை அணிந்த பெண்ணைக் குதம்பாய் என்று விளித்து அந்தச் சித்தர் பாடினர். ஆதலால் குதம்பைச் சித்தர் என்ற பெயர் பெற்ருர். . - -