பக்கம்:விடையவன் விடைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 103.

397. அருணகிரிநாதருடைய காலம் எது ?

பதினைந்தாம் நூற்ருண்டு என்று தெரிகிறது.

398. பாணன் மனைவியைப் பாணினி என்று சொல்ல லாமா ?

பாடினி என்றுதான் வழக்கு இருக்கிறது. 399. நாண்மங்கல விழா என்பது என்ன ?

பிறந்த நாள் விழாவை நாண்மங்கலம் என்பர்.

400. தருமன், பீமன் என்ற பெயர்கள் காமைகதேசம் என்று படித்த ஞாபகம். விளக்கம் வேண்டுகிறேன்.

முழுப் பெயரின் ஒரு பகுதியைமட்டும் சொல்வது நாமைகதேச நாமக்ரஹணம்; பெயரின் ஒரு பகுதியைச் சொன்ன இடத்தில், முழுப் பெயரையும் கொள்க என்பர் வடநூலார். நாம ஏகதேசம் அல்லது பெயரின் ஒரு பகுதி என்பதுபொருள். தருமபுத்திரன் தருமன் எனவும், பீமசேனன் பீமன் எனவும் ஆனமை நாமைகதேசம். -

40. * அயுதம் என்ற சொல்லின் பொருள் என்ன ? பதினுயிரம்.

402. தொடுகடல் என்பது கீழ்கடலுக்குப் பெயர் என் கிருர்கள்; அதற்குக் காரணம் என்ன ? - -

தொடுதல் என்பதற்குத் தோண்டுதல் என்பது பொருள். தொடுகடல் என்பதற்கு, புதிதாகத் தோண்டப்பட்ட கடல் என்பது பொருள். சகரர் பூமியை அகழ்ந்து பாதாள உலகத்துக்குப் போளுர்கள் என்றும், அவர் அகழ்ந்த இடம் , கடலாயிற்றென்றும், சகரர் அகழ்ந்தமையால் சாகரம் ஆயிற்று என்றும் புராண வரலாறு கூறுகிறது. அதுவே