பக்கம்:விடையவன் விடைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 விடையவன் விடைகள்

கீழ் கடல். ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இந்தியாவோடு இணைந்திருந்த பகுதி, பிறகு பூகம்பத்தால் மறைந்து கடலாயிருக்கும். அதையே புராணம் கதையாகச் சொல்

கிறது போலும்.

403. வங்கணச் சிங்கி என்று குறவஞ்சியில் வருகிறது பொருள் என்ன ?

வங்க்ணம்-நட்பு, நட்புடைய சிங்கியே என்பது பொருள். கிங்கி என்பவள் பறவைகளை வேட்டையாடும் சிங்கனுடைய மனைவி.

404, மயனெனக் கொப்பாய் வகுத்த பாவையில்-மயன் என்பவன் யார் ? -

அசுரர்களின் தச்சனென்று புராணங்கள் கூறுகின்றன.

405. ஆடியானனன் என்றது யாரை ? அந்தப் பெயர் வரக் காரணம் என்ன ?

குருடனைக் குறிப்பது அது. திருதராஷ்டிரனைப் பாரதம் ஆடியானனன் என்று கூறும். ஆடி-கண்ணுடி, கண்ணுடியை யாவரும்பார்ப்பார்களே யன்றி,அது யாரையும் பாராது. அது போலப் பிறர் தம் முகத்தைப் பார்ப்பதே அல்லாமல் அம் முகம் பிறரைப் பார்க்க இயலாமையால் அப் பெயர் வந்தது.

406. தட்டாடை என்று சுற்றிக் கட்டும் ஆடையைச் சொல்கிறர்கள். தட்டுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ?

தற்ருடை என்பதன் திரிபு அது; இறுக்கிக் கட்டும்

ஆடைக்கு அது பெயர். மடிதற்றுத் தான்முந் துறும் என்பது திருக்குறள். .