பக்கம்:விடையவன் விடைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் - 107

முறை வேடன் அருளிய பூசை மகிழ்கதிர் காமம் உடையோனே’ என்று வருகிறதே, வேடர்கள் பூசித்ததாகக் கந்த புராணத்தில் இல்லையே ! .

கதிர்காமத்தில் வேடர்களே முருகனைப் பூசித் வந்தார் கள். இன்றும் காட்டில் வாழும் சிங்களவர்களே பூசிக்கிருர் கள். இது அந்தத் தலவரலாற்றில் உள்ள செய்தி.

9. முருகனுடைய முக்கியமான வாகனங்கள் எவை ?

மயில், ஆடு, யானே.

10. கந்தப் பெருமான் நாம் முருகன் என்று அழைக் கிருேம். அப்பெயர் எப்படி வந்தது ?

முருகு உடையவன் முருகன். முருகு என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. முக்கியமாக மணம், இளமை, அழகு, தெய்வத்தன்மை என்பவற்றைச் சொல்லலாம். இவற்றில் சிறந்து விளங்குவதனால் முருகன் என்ற பெயர் வந்தது. முருகன் அல்லது அழகு (திரு. வி. க.) என்ற நூலிலும்,பெரும் பெயர் முருகன் (கி. வா. ஜ.)என்ற நூலிலும் இதன் விரிவைக் கானலாம். .

11. வேள் என்ற சொல் முருகனையும் காமனையும் குறிக்கும் என்கிருர்கள். இருவருக்கும் வேறுபாடு உண்டா?

காமன் கருநிறம் உடையவன்; ஆதலின் கருவேள். முரு கன் செந்நிறம் உடையவன்; ஆதலின் செவ்வேள்:

12. முருகன் ஏறும் மயிலாகச் சூரபன்மன் ఇఅá என்று சொல்கிருர்களே; அப்படியானல் முன்பு முருகனுக்கு

வாகனம் இல்லையா ? -

முருகனுக்குப் பிரணவமே மயிலாக இருப்பது. அப்பால் சூரனுடன் போர் புரியும்போது இந்திரன் மயிலாக வந்து