பக்கம்:விடையவன் விடைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 109

கோவை சி. கு. சுப்பிரமணிய முதலியார் கந்தபுராணக் கலி வெண்பா என்ற சிறிய நூலை இயற்றியிருக்கிரு.ர்.

18. பதுமகோமளே என்பவள் யார் ? கந்தபுராணத்தில் வரும் சூரபன்மனுடைய தேவி அவள்.

19. அம்பிகையின் நிறம் சிவப்பு எ ன் கி ருர் க ள்: உண்மையா ?

பரதேவதையாகிய ராஜராஜேசுவரி செந்நிறம் உடைய வள்; உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்...என்ன விதிக் கின்ற மேனி அபிராமி என்று அபிராமி அந்தாதியில் வருகிறது.

20. லோயதாட்சி, காமாட்சி, விசாலாட்சி, மீனுட்சிஇத் திருநாமங்களுக்குரிய தமிழ்ப் பெயர்கள் எவை?

கருந்தடங்கண்ணி, காமக்கண்ணி, பெருந்தடங்கண்ணி, அங்கயற்கண்ணி என்பவை தமிழிலக்கியத்தில் வரும் திருப் பெயர்கள், -

21. தேவியைக் கதம்பவன சாரிணி, கதம்பவன மத்யகா என்று சொல்கிறர்கள். கதம்பவனத்தின் தமிழ்ப் பெயர் என்ன ? கதம்பவனத்தை க்ஷேத்திர விருட்சமாக உடையவை யாவை ?

கடம்பவனம் என்று வழங்கும். கடம்ப மரத்தைத் தல விருட்சமாக உடையவை மதுரை, கடம்பர் கோயில் முதலியன. . . . .

22. அபிராமி அந்தாதியில், கறைக் கண்டனுக்கு மூத்தவளே என்று வருகிறதே; அது எவ்வாறு பொருந்தும் ?

சக்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றும் - இதை நினைத்து அவ்வாறு கூறினர். -