பக்கம்:விடையவன் விடைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 விடையவன் விடைகள்

23. காளியைத் திகம்பரி, முண்டமாலினி என்று வழங்கு வதற்குக் காரணம் என்ன ?

வேறு ஆடையின்றித் திக்கையே ஆடையாக உடைமை யால் திகம்பரி என்றும், கபாலங்களைக் கோத்து மாலையாக அணிந்தமையால் முண்டமாலினி என்றும் திருநாமங்கள் வந்தன. .

24. கல்லாலின் புடையமர்ந்து என்று தட்சினமூர்த்தி யின் துதியில் வருகிறது. கல்லால் என்பது என்ன மரம் :

மலையில் வளரும் ஆல் என்று பொருள்; இப்போது இச்சிமரம் என்று வழங்குவதே அது.

25. பஞ்ச சபைகள் எவை ?

1. திருவாலங்காட்டில் உள்ளது இரத்தின சபை, 2. சிதம்பரத்திலுள்ளது கனகசபை, 3. மதுரையிலுள்ளது ரஜதசபை (வெள்ளியம்பலம்); 4. திருநெல்வேலியிலுள்ளது தாமிர சபை, 5. திருக்குற்ருலத்தில் உள்ளது சித்திர சபை.

26. சைலாதி மரபுடையோன் என்பது யாரைக்குறிக்கும்:

சிலாதருடைய புதல்வராதலின் நந்தியெம்பெருமானுக் குச் சைலாதி என்று பெயர். அவருடைய மரபில் வந்த வர்கள் சைவசித்தாந்த மடங்களின் தலைவர்கள். திருவா வடுதுறை ஆதீனத்தின் முதல் குருமூர்த்தியாகிய நமசிவாய மூர்த்தியை, குருநமசி வாய தேவன், சயிலாதி மரபுடை யோன்' என்று ஒரு பாடல் குறிக்கிறது.

27. திருவாரூர்த் தியாகராஜ சுவாமியின் அஜபா நடனம் என்பது யாது ? . -