பக்கம்:விடையவன் விடைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 1 11

தியாகராஜப் பெருமான் திருமாலின் திருமார்பில் இருந் தார். சயனித்திருந்த திருமால் உச்சுவாச நிச்சுவாசத்தோடு அஜபா மந்திரத்தை ஜபித்தார். அதனால் அவர் மார்பு வீங்கித் தணிந்தது. அவர் மார்பிலிருந்த தியாகேசர் அந்த அசைவில் ஆடினர். அந்த ஆட்டமே அஜபா நடனமாகும். வாயால் உச்சரிக்காமல் உச்சுவாச நிச்சுவாசத்தோடு மனனம் பண்ணுவதால் அதற்கு அஜபா மந்திரம் என்று பெயர்; ஹம்ஸ் மந்திரம் என்றும் பெயர் பெறும். அதனுல் தியா கேசர் நடனத்துக்கு ஹம்ஸ் நடனம் என்றும் பெயருண்டு. திருமாலின் திருமார்பில் இருந்தபடியே ஆடியதல்ை அவருக்கு இருந்தாடழகர் என்ற பெயர் வந்தது.

28. பாட்டில் விடையைப் பகர்ந்திடும் கி. வா. ஜ.,

நாட்டில் இயற்பெயர் கற்றமிழ் ஞானசம் பந்தருக் கில்லையோ ? ஆளுடைய பிள்ளையென்று சந்ததமும் கூறிடுவார். உண்டு.

சமயகுர வர் நால்வர் தம்முளே மூவர்க் கமையும் இயற்பேர் அறிவோம்.நமையாண்ட சீரார்சம் பந்தர்பேர் சேக்கிழாருங்கூருர், ஆரே அறிவார் அதை ?

29. பதினெண் வகைச் சிவகணங்கள் என்பவை யாவை?

பதினெண்கணங்கள் என்று உண்டேயன்றிப் பதினெண் சிவகணங்கள் என்று இல்லை. ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர் என்று திருமுருகாற்றுப்படையிலும், பதினெண் கணனும் ஏத்தவும் படுமே என்று புறநானூற்றிலும் அக் கணங்களைப்பற்றிய செய்தி வருகிறது. நச்சிஞர்க்கினியர் கூறும் விளக்கம்: தேவர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம்புருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தர்வர், சித்தர், சாரணர், யூதர், பைசாசர், தாராகணம், நாகர், ஆகாயவாசிகள், போக பூமியோர், x - ~