பக்கம்:விடையவன் விடைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய்ம் 113

35. திருஞானசம்பந்தரைக் கவுணியர்கோன் என்று பெரிய புராணம் கூறுகிறது. கவுணியர் என்பது யாரைக் குறிக்கிறது ?

அந்தணர்களின் கோத்திரங்களில் ஒன்று கவுண்டின்ய கோத்திரம். அதில் தோன்றினவர்களைக் கவுண்டின்யர் என்பது வழக்கம்; அதுவே கவுணியர் எனத் திரிந்தது. சம்பந்தப் பெருமான் கவுண்டின்ய கோத்திரத்தில் தோன் றினவர்; கவுண்டின்யர் என்பவர் பழங்காலத்தில் இருந்த

மகரிஷி.

36. சிவபெருமானுக்குப் பிள்ளைத் தமிழ் இல்லை என்கிருர் களே; அது உண்மையா ? ஏன் ? * -

ஆம்; பிறவா யாக்கைப் பெரியோ தைலின் அவன் குழந்தையாக இருந்ததில்லை. அதனுல் பிள்ளைத் தமிழ் பாடு வது மரபு அன்று. -

37. பஞ்ச புராணம் என்பது எந்த நூல்களைக் குறிக் கிறது ? -

சிவ பூசைக்குப் பிறகு ஒதப்பெறும் பாடல்களையுடைய நூல்களைக் குறிக்கும். அவை தேவாரம். திருவாசகம், தி ரு விசைப் பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் என்பன. -

38. புராரி என்பது சிவனைக். குறிப்பதற்குக் காரணம்

புரங்களின் பகைவன் என் பது பொருள். சிவ பெருமான் திரிபுரங்களை அழித்தமையால் இந்தப் பெயர்

39. ஆகமம் என்ருல் என்ன? இருபத்தெட்டு ஆகமங்கள் எவை ?