பக்கம்:விடையவன் விடைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 விடையவன் விடைகள்

ஆகமம் என்பதற்குப் பொதுவாக நூல் என்பது பொருள். நூல் ஆதாரத்தை ஆகமப் பிரமாணம் என்று சொல்லுவதிலிருந்து இதை அறியலாம். ஜைன ஆகமங்கள், பாஞ்சராத்திர ஆகமங்கள், வைகானஸ் ஆகமங்கள், சிவாக மங்கள், தேவி ஆகமங்கள் என்று அந்த அந்தச் சமயத்துக்கு வேறு வேறு உண்டு. இருபத்தெட்டு ஆகமங்கள் சைவத்துக் குரியவை; அவை வருமாறு: காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூட்சுமம், சக சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம் ஆக் கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திர ஞானம், முகவிம்பம், புரோற்கீதம், வனிதம், சித்தம், சந்தானம், சர் ேவா த் த ம ம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம்,

40. சிவபெருமானத் தோடுடைய செவியன்' என்று சொல்வது எதளுல் ? -

சிவபெருமான் இடக்காதில் தோடும் வலக் காதில் சங்கக் குழையும் அணிந்திருக்கின்ருன், வாம பாகம் அம்பிகைக் குரியதாதவின் அந்தக் காதில் பெண்கள் அணியும் தோட்டை அணிந்திருக்கிரு:ன்.

41. சிவன் கோவில்களில் அம்பிகை, சுப்பிரமணியர் முதலியவர்களுக்கு மூலவரும் உற்சவரும் ஒரே உருவமாக இருப்பினும் சிவனுக்குமட்டும் மூலவர் லிங்க உருவமாயும் உற்சவர் வேறு விதமாகவும் அமையக் கரரணம் என்ன ?

அம்பிகை, சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளிலுங்கூட மூலமூர்த்திக்கும் உற்சவ மூர்த்திக்கும் வேறுபாடு உண்டு, தண்டபாணி மூல விக்கிரகமாக இருக்க, உற்சவ விக்கிரகம் வள்ளி தெய்வானயோடு உள்ள சுப்பிரமணியராக இருப் பதும் உண்டு; திருமால் ஆலயங்களிலும் மூல மூர்த்தி வேறு, உற்சவ மூர்த்தி வேருக இருப்பது உண்டு. சிவ பெருமானுடைய வடிவங்கள் இருபத்தைந்தில் முதலாவதாக