பக்கம்:விடையவன் விடைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*Lp囲山山b -x. 115.

இருப்பது லிங்கோற்பவ மூர்த்தி. அது உருவும் அருவும் இல் லாத அருவுருவம். அதை உற்சவ மூர்த்தியாக எழுந்தருளு விக்கும் வழக்கம் எங்குமில்லே. அது ஸ்திரமாக உள்ள மூர்த்தி, -

42. சிவபெருமான ஏன் லிங்க உருவில் வழிபடுகிருேம் ?

சிவபெருமானுக்குரிய மூர்த்திகளில் முதலாவது லிங் கோற்பவ மூர்த்தி, அருவம், அருவுருவம், உருவம் என்ற மூன்று வகையான முறையில் இறைவனை வழிபடுகிருேம். அருவாக உள்ள இறைவன் அருவுருவாக வந்து பிறகு உருவ முடையவனாக வருகிருன். சிவலிங்கம் கை கால் முதலியன பெருமையால் அருவம் போன்றது; கண்ணுல் காணுவதனால் உருவம். ஆகவே அது அருவுரு. இறைவன் உருவாகத் தோற் றுவதற்குமுன் சோதிலிங்கமாக முதலில் தோன்றினன் என் பது புராண வரலாறு. முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி' என்பது தேவாரம் .

43. நமசிவாய, சிவாயகம இரண்டும் என்ன ?

சிவனுக்கு நமஸ்காரம் என்பது சொற்ருெடரின்

பொருள். ஆனல் ஒவ்வோர் எழுத்துக்கும் தனித் தனியே

பொருள் உண்டு. முதலிலுள்ளது ஸ்தூல பஞ்சாட்சரம்: அடுத்தது குசும பஞ்சாட்சரம். z

44. சிவ பக்தர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களில் நால்வர்மட்டும் சிறந்து விளங்கக் காரணம் யாது : -

நால்வரில் ஞானசம்பந்தர். அப்பர், சுந்தரர் என்னும் மூவரே அறுபத்துமூவரைச் சார்ந்தவர்கள். மாணிக்க வாச கர் அவர்களைச் சாராதவர். இந் நால்வரும் பல வகை அருட் செயல்களைச் செய்து அரிய பாக்களையும் அருளிச் செய்தவர் க்ள்; ஆகையில்ை சைவ சமயசாரியர்களாகப் போற்றப் பெற்றனர். . - . .