பக்கம்:விடையவன் விடைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 117

48. ஆழ்வார்களின் பாசுரங்கள் வேதசாரம் என்று வைணவர்கள் கூறுவர். நாயன்மார்களின் பாசுரங்களுக்கு அத் தகைய சிறப்பு உண்டா ?

சைவத் திருமுறைகளைத் தமிழ் வேதம் என்பது வழக்கம். ஞானசம்பந்தரது தேவாரத்தைப்பற்றிக் குறிக்கும்போது, எல்லையிலா மறைமுதல்மெய் யுடனெடுத்த எழுதுமறை” என்று குறிக்கிருர், சேக்கிழார். தேவாரம் வேதசாரம்’ என்ற புத்தகத்தைச் செந்தில்நாதையர் என்பவர் எழுதி யிருக்கிருர், .

49. சிவசகசிர காமம் எந்தப் புராணத்தில் இருக்கிறது ? மகாபாரதத்தில் இருக்கிறது. விஷ்ணு சகசிர நாமமும் அதில்தான் இருக்கிறது. - -

50. ஆத்தி சூடி அமர்ந்த தேவனை' என்பது எந்தக் கடவுளேக் குறிக்கிறது ?

சிவபெருமானே. அவர் ஆத்தி மலரை அணிந்திருக் கிருர், . .

51. அண்ணல் ஐம்முகங்களும் அருளும் ஆகமம் என்ற பாடலில் வரும் ஐம்முகங்கள் யாவை ?

சிவபிரானுக்குரியனவாகிய ஈ சா ன ம், தத்புருஷம். அகோரம், வாமதேவம், சக்தியோஜாதம் என்னும் ஐந்து, முகங்கள்.

52. பரமேசுவரர் என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவரா ? அல்லது வேறுபட்டவரா ? . . .

வைன வர்கள் மும்மூர்த்திகளில் ஒரு வ ர் என்பர் சைவர்கள் மும்மூர்த்திகளுக்கும் மேலானவர் என்பர்.

53, மகேசுவர ്യങ്ങള என்று ஏன் பெயர் வந்தது ? .