பக்கம்:விடையவன் விடைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 விடையவன் விடைகள்

மகேசுவரனுடைய அடியார்கள் மாகேசுவரர்கள். அவர் களை வழிபட்டு உணவளிப்பதல்ை மாகேசுவர பூஜை என்று பெயர் வந்தது; அதையே மகேசுவர பூஜை என்பர்.

54. குதிரை முகமுடைய கடவுளர் உண்டா ?

ஹயக்கிரீவர் குதிரை முகமுடையவர்; திருமாலின் ♔ ബ് தாரம். தும்புரு என்னும் முனிவர் குதிரை முகமுடையவர்.

55. திருச்சானுர் அம்மனுக்குரிய கழி அலமேலு மங்கா’ என்ற பெயர் அலர்மேல் மங்கை' என்ற தமிழ்ப் பெயரிலிருந்து மருவியதுதான ? அப்பெயரின் வடமொழி யுருவம் யாது ?

ஆம். பத்மாவதி என்பது வடமொழிப் பெயர்.

56. தசாவதாரத்தில் ஒன்றன புத்தாவதார மூர்த்தியும், புத்த மதம் ஸ்தாபித்த புத்தரும் ஒருவரா? .

இருவரும் ஒருவரே, தசாவதாரத்தில் புத்தாவதாரமும் சேர்ந்தது என்பது சிலர் கொள்கை, அஷ்டபதி பாடிய ஜய தேவர் அந்தக் கொள்கையை உடையவர்.

57. திருமண் அணிவதை நாமம் போடுதல் என்று வழங்குகிறர்கள். அது எப்படி வந்தது?

திருமாலின் திருநாமத்தைச் சொல்லி அணிவதால் அந்த வழக்கு வந்திருக்க வேண்டும். வைணவர் அல்லாத பிறரே இதைப் பெரும்பாலும் வழங்குகிருர்கள்.

58. அஷ்டலட்சுமிகள் யாவர்? தனலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, வித்தியாலசுமி, கீர்த்திலசுமி, விஜயலக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி.