பக்கம்:விடையவன் விடைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் - 119

59. திருவிருத்தம் என்ற நூல் யாரால் இயற்றப்பட்டது ? அது எவ்வகையான நூல் ?

நம்மாழ்வார் இயற்றியது. கட்டளைக் கலித் துறையால் திருமாலின் புகழைச் சொல்வது.

60. எங்கள் ஊராகிய மதுரையில் அழகர் திருவிழாக் காலத்தில் நகரப் பெருமக்கள் சிலர் ஒருங்கிணைந்து ஆற்றின் ஓர் ஓரத்தில் ஒரு மண்டபத்தில் பெருமாளை வரவேற்றுப் பிறகு ஏழைகளுக்கு உணவளிக்கின்றனர். அதனைச் சிறப்பு என்கின் றனர். உதாரணம் : பந்தல்குடியார் சிறப்பு. அந்தப் பெயர் எவ்விதம் வந்தது ? -

பொது, சிறப்பு என்ற இரண்டும் ஒன்றற்கொன்று வேறு

பட்ட பொருளுடையன. சில விசேஷ நாளில் நடப்பதால் சிறப்பு என்று வழங்குகிறது. சிறப்பு என்பதற்கே விழா என்று பொருள் உண்டு,

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வாளுேர்க்கும் ஈண்டு' என்ற திருக்குறளில் நைமித்திகமாகிய விழாவைச் சிறப்பு என்று சொல்கிருர் வள்ளுவர். ஆகவே, விழாவின் அங்கமாக உள்ள நிகழ்ச்சிகளைச் சிறப்பு என்று குறிக்கிருர்கள். கோயில் விழாக்களில் பெருமாளுக்குச் சமர்ப்பித்து அனைவருக்கும் உணவு அளிப்பதை வைணவர்கள், சிறப்பு விடுதல்’ என் பார்கள். - -

61. அஞ்சிலே ஒன்று பெற்றன் என்ற பாடலில் அஞ்சு அஞ்சு என்று வருகிறதே. பொருள் என்ன ?

• ‘ அஞ்சிலே ೯ಾಣಿಲ பெற்ருன், அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்ரு முக ஆரியற் காக ஏகி, அஞ்சிலே ஒன்று. பெற்ற அணங்கைக்கண் ட்யலா ரூரில், அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்நம்மை அளித்துக் காப்ப்ான்’ என்பது கம்ப