பக்கம்:விடையவன் விடைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 123

அமைந்த பெயர். சைவர்களில் பலவகை உண்டு. முக்கியமாகச் சைவ சித்தாந்திகள், வீர சைவர்கள் என்பவர்கள் இப்போது உள்ளனர். சைவ சித்தாந்தத்துக்கும் அத்வைத வேதாந்தத் துக்கும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உண்டு. அத்வைதம் ஒரே பொருள்தான் உண்மை என்றும், மாயையால் உண்டான தோற்றம் மாறினல் ஆன்மாவே பரமாத்மாவாக உள்ள நிலை அநுபவத்தில் கைவரும் என்றும் கூறும். சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நித்தியமான பொருள்கள் என்றும், பசு பதியுடன் இரண்டறக் கலத்தலே முக்தி.என்றும் கூறும்.

73. முப்பத்துமூன்று தேவர்கள் என்பதற்கு வகை என்ன?

பன்னிரண்டு ஆதித்தர்கள், பதினொரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள் அசுவினி தேவர்கள் இருவர் ஆக முப்பத்து மூவர்.

74. துவாநச உபநிஷத்துக்கள் யாவை ?

ஈசாவாஸ்யோபநிஷத், கேநோபநிஷத், கடோபநிஷத், பிரச்நோபநிஷத், முண்டகோபநிஷத், மாண்டுக்யோபநிஷத், தைத்திரியோபநிஷத், ஐதரேயோபநிஷத், சாந்தோக்யோப நிஷத், பிருகதாரண்யகோபநிஷத், (சுவேதாசுவதரோபநிஷத் கெளவீதகி உபநிஷத் என்பன. . . x -

75. கோபுரத்துக்கும் விமானத்துக்கும் வேறுபாடு உண்டா ? . .

இறைவன், - இறைவியின் கருப்பக்கிருகத்துக்கு மேல் இருப்பது விமானம். மற்றவை கோபுரங்கள். r -

16. ஆறு சாத்திரங்கள் எவை? ஒவ்வொன்றும் எதைப் பற்றிக் கூறுகிறது : х