பக்கம்:விடையவன் விடைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&Funiuih 125

தெய்வமாக வழிபடும் கெளமாரம், திருமாலைப் பரதெய்வ மாக வணங்கும் வைணவம், சூரியனைக் கடவுளாக வணங் கும் செளரம் என்பன ஆறு சமயங்கள்.

80. வேதத்துக்கும் வேதாந்தத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?

வேதம் என்பது முழு நூலுக்கும் பெயர். வேதாந்தம் என்பது அதன் இறுதிப் பகுதிக்குப் பெயர். வேதம் கர்ம காண்டம், உபாசனு காண்டம், ஞான காண்டம் என்ற மூன்று பகுதிகளை உடையது. ஞான காண்டமே வேதாந்த மாகிய உபநிஷத்துக்கள்.

- 81. வானத்தின்மீது மயிலாடக் கண்டேன், மயில்குயில் ஆச்சுதடி, அக்கச்சி.மயில் குயிலாச்சுதடி’-இ தற்கு ப் பொருள் தருக? -

யோகம் செய்பவருக்கு உண்டாகும் அநுபவத்தைக் கூறுவது இது. அழகிய ஒளிமயிலைப் போலச் சோதியின் காட்சி முதலில் தோன்றப் பின்பு இனிய நாதம் கேட்கு மாம். அதனையே இவ்வாறு குறிப்பாகச் சொன்னர் இராம லிங்க சுவாமிகள். - - . . . . .

82. கோயில்களில் மூலவர் என்றும் உற்சவர் என்றும் ஒரே தெய்வத்துக்கு இரு வேறு வடிவங்களை அமைத்து வழிபடுவதற்குக் காரணம் யாது? - - -

கோயில் வழிபாட்டில் நித்தியமென்றும் நைமித்திக மென்றும் இரண்டு உண்டு. சிறப்பொடு பூசனை செல்லாது என்ற திருக்குறள் நைமித்திகமாகிய விழாவைச் சிறப் பென்றும், நித்தியமாகிய ஆராதனையைப் பூசனையென்றும் குறிக்கிறது. விசேட காலங்களில் யாவரும் காணத் திருவீதியில் எழுந்தருளுவதற்காகவே உற்சவ முர்த்திகளை அமைத்திருக்கிருர்கள். கோயிலுக்கு வர இயலாதவர்கள் எளிதில் வ்ழிபட இந்த உற்சவமூர்த்திகள் பயன்படு