பக்கம்:விடையவன் விடைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 விடையவன் விடைகள்

கின்றனர். இறைவனை நாடிச் சென்று வழிபடும் முயற்சியும் அன்பும் இல்லாதவர்களை ஆட்கொள்ள ஆண்டவன் விழாக் கொண்டு உலா வருகிருன் என்று பெரியோர் கூறுவர். 'நையாத மனத்தினரை நைவிப்பான் இத்தெருவே, ஐயா நீ உலாப் போந்த அன்றுமுதல்’ என்பது திருவிசைப்பா.

83. சும்மா இருத்தல் என்பதன் முழுத்தன்மை என்ன ? அவ்வாறு இருப்பது மனிதனல் முடியுமா ?

கம்மா என்பதற்குச் செயலின்றி என்று பொருள். மனம், வாக்கு, காயம் என்ற மூன்றும் நின்ப்பு, உரை செயல் என் பன அடங்கிச் சமாதி நிலையில் அமர்ந்திருத்தலையே சும்மா இருத்தல் என்பார்கள். கருவி கரணம் கழன்ற நிலை அது. மெய்ஞ்ஞானியர்கள் அந்த நிலையில் இருப்பார்கள். ராம கிருஷ்ணர், ரமண பகவான் போன்றவர்கள் அவ்வாறு இருந்தவர்கள்.

84. ஆழ்வார்களின் பாடல் பெற்ற திருமால் திருப்பதிகள் 108 என்ற வரையறை இருக்கின்றது. அதுபோல நாயன் மார்கள் பாடிய சிவஸ்தலங்கள் எத்தன . இவற்றின் விவரம் அடங்கிய தொகுப்பு நூல் எங்கே கிடைக்கும் ?

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 274. அவற்றைப் பற்றிய விவரங்களைச் சிவஸ்தவ மஞ்சரி என்ற நூலில் காண லாம் கிடைக்கும் இடம். வ. சு. செ. தணிகை நாயகன், ஆரீநிவாச அவென்யூ, வேங்கடராமையர் தெரு, நாராயண செட்டி தோட்டம், சென்னை-28. . . . . ‘. . .

85. காஞ்சிவாய்ப் பேருர் என்று பேருரைச் சொல் கிருர்களே, காஞ்சிவாய் என்பதற்கு என்ன பொருள் :

காஞ்சி என்பது ஒர் ஆற்றி ன் பெயர். இப்போது நொய்யல் என்று வழங்குகிறது. அதன் கரையில் இருப் பதால் அந்தப் பெயர் வந்தது. .