பக்கம்:விடையவன் விடைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 131

104. பாடல் பெற்ற தலம், புராணத் தலம் என்ற இரண்டுக்கும் வேறுபாடு என்ன ?

மூவருடைய தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலத்தைப் பாடல் பெற்ற தலம் என்பார்கள். அப்படியின்றித் தவ புராணத்தைமட்டும் பெற்றதைப் புரா ண த் தலம் என்பார்கள்,

105. மதுரைக்கு நான்மாடக்கூடல் என்று பெயர்வரக் காரணம் என்ன ? -

முன் ஒரு காலத்தில் பெருமழை பெய்ய, அதனல் விளையும் தீங்கினின்றும் மதுரையைக் காக்கும் பொருட்டு ஆலவாய் இறைவன் தன் சடாபாரத்திலுள்ள நான்கு மேகங்களை விட்டு, நான்கு மாடங்களாகக் கூடி நின்று பெய்யும் மழை யாவும் நகருக்குள் விழாதபடி செய்தருளிய மையால் அப்பெயர் வந்ததென்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

106. சோபானம் என்பது என்ன ? நால்வகைச் சோபானம் என்று குறிக்கும் பொருள்கள் எவை ?

சோபானம் என்பதற்குப் படி என்பது பொருள்" இறைவனை அடைவதற்கு நான்கு வகைப் படிகள் அல்லது சோபானங்கள் உண்டு. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன அவை, -

107. சைனர்களுக்கும் ஆகமம் உண்டு என்கிறர்களே அவை யாவை ?

இரண்டு ஆகமங்கள் உண்டு; அவை அங்காகமம் பூர்வாகமம் என்பவை. . . . . . . . . -

108. இரண்டு தலங்கள் திருக்காட்டுப் பள்ளி என்ற யெயருடன் இருப்பதாகச் சொல்கிருர்கள். அவை எங்கே இருக்கின்றன ?