பக்கம்:விடையவன் விடைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 விடையவன் விடைகள்

கீழைத் திருக்காட்டுப்பள்ளி, மேலைத் திருக்காட்டுப்பள்ளி என்று இரு வேறு சிவத் தலங்கள் உண்டு. இரண்டும் பாடல் பெற்றவை. திருவெண்காட்டுக்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி. பூதலூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வடக்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது மேலைத் திருக்காட்டுப் பள்ளி. இதை இப்போது திருக்காட்டுப்பள்ளி என்றே வழங்குகிறர்கள்.: .

109. வைப்புத் தலம் என்பது என்ன ?

தேவாரத்தில் தனியே பதிகங்கள் உள்ள தலங்கனைப் பாடல் பெற்ற தலங்கள் என்பார்கள். தனியே பதிகம் இல்லாமல் பாடல்களின் இடையே குறிக்கப்பெறும் தலங் களே வைப்புத் தலங்கள் என்பர். பாடலினிடையே வ்ைத்துப் பாடியதால் வைப்புத் தலம் என்ற பெயர் உண்டாயிற்று.

110, காதவிந்து கலாதீ நமோ நம’ என்ற திருப்புகழில், ‘ராஜகம்பீர நாடாளும் நாயக’ என்று வருகிறது. அந்த நாடு எது? ஏன் அந்தப் பெயர் வந்தது ? -

வயலூர் இருக்கும் நாட்டுக்குரிய பழைய பெயர் அது. ராஜ கம்பீரன் என்பது இரண்டாம் இராசராச சோழன் பெயர். அவன் காலத்தில் அந்தப் பெயர் ஏற்பட்டது. வயலூருக்குப் போகும் வழியில் உள்ள கற்குடிக்கு இராச கம்பீர வள நாட்டு மலை என்று ஒரு பெயர் வழங்கியது.

1 11. இராமகிருஷ்ண பரம ஹ ம் சர் வழிபட்ட தட்சினேசுவரக் காளியின் பெயர் பவதாரிணி என்று நூல்களில் படித்திருக்கிறேன். அதற்குப் பொருள் என்ன ? . . . . . . . ; , ; *

பவம் என்பது பிறப்பு. . ಹThಾಗಿ - கடக்கச் செய்பவள். பிறவிப் பெருங்கடலைக் கடக்கச் செய்கிறவள் என்பது அந்தத் திருநாமத்தின் பொருள்.