பக்கம்:விடையவன் விடைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் 133

112. சப்தகோடி மகாமந்திரம் என்ருல் ஏழு கோடி மந்திரங்கள் என்று பொருளா? -

கோடி என்பது முடிவு என்ற பொருளை உடைய சொல். தென்கோடி, வடகோடி என்று சொல்வது போல, ஏழு வகை யாக முடியும் மந்திரங்களைச் சப்தகோடி மகாமந்திரங்கள் என்பர். அவை நம, சுவாஹா, சுவதா, வவுட், வெளவுட், ஹாம், பட் என்பன.

1 13. குருவிங்க சங்கமம் என்பன யாவை ?

குரு என்பது ஆசாரியன; விங்கம் என்பது മൂജഗുഖങ്ക്, சங்கமம் என்பது தொண்டர்களே. % . .

114. தரிசிக்க, பிறக்க, இறக்க, கினைக்க முத்தி தரும் தலங்கள் எவை ?

தரிசிக்க முத்தி தருவது தில்லையாகிய சிதம்பரம், பிறக்க முத்தி தருவது திருவாரூர்; இறக்க முத்தி தருவது காசி, நினைக்க முத்தி தருவது திருவண்ளுமல. .

115. சப்த விடங்கத்தலங்கள் எவை? அங்குள்ள தியாக ராச மூர்த்திகளுக்குத் தனித்தனிப் பேருண்டா ? *..

(1) திருவாரூரில் விதி விடங்கர் எழுந்தருளிக்கிருர், அவருடைய நடனம் அசபா நடனம். (2) திருநள்ளாறு என்னும் தலத்தில் நகவிடங்கர் எழுந்தருளியிருக்கிருர்; அவருடைய நடனம் உன்மத்த நடனம். (3) திருநாகைக் காரோணத்தில் (நாகபட்டினம்) சுந்தர விடங்கர்; பாராவார தரங்க நடனம். (4) திருக்காருயிலில் (திருக்காறை வாசல்) ஆதிவிடங்கர்; அவர் நடனம் குக்குட நடனம். (5) திருக் கோளிலி (திருக்குவளை)யில் அவனி விடங்கர், பிருங்க நடனம் ஆடுகிருர். (6) திருவாய்மூரில் நீலவிடங்கர், கமல நடனம் ஆடுகிருர். (1) திருமறைக் காட்டில் (வேதாரணியம்) , புவனிவிடங்கர், ஹம்ஸ்பாத நடனம் ஆடுகிரு.ர்.