பக்கம்:விடையவன் விடைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 விடையவன் விடைகள்

116. தட்சிண கைலாசம் என்று சொல்லப்பெறும் தலங்கள் எவை ? -

ஆந்திர நாட்டில் உள்ள திருக்காளத்தியும், தமிழ் நாட்டிலுள்ள திரிசிராப்பள்ளியும், இலங்கையிலுள்ள திருக் கோணமலையும். திருவையாற்றில் திருநாவுக்கரசர் திருக் கைலாய தரிசனம் செய்தமையின் அங்குள்ள தனிக் கோயிலுக்குத் தட்சிண கைலாசம் என்ற பெயர் உண்டு.

117. காரோணம் என்ற பெயருடைய தலங்கள் எவை ? காரோணம் என்ற சொல்லின் பொருள் என்ன ?

காயாரோகணம் என்பதே காரோணம் ஆயிற்று. பிறர் காயத்தை (உடலை)ச் சுமத்தலால் அப் பெயர் வந்தது. கச்சிக் காரோணம், குடந்தைக் காரோணம், நாகைக் காரோணம் என மூன்று காரோணத் தலங்கள் உண்டு.

118. குரங்கு பூசித்த தலங்கள் எவை ?

குரக்குக்கா, குரங்கனில் முட்டம், தென் குரங்காடு துறை (ஆடுதுறை), வடகுரங்காடு துறை (ஆடுதுறைப் பெருமாள் கோயில்.)

119. ஆடுதுறை, திருவாடுதுறை இரண்டும் ஒன்ரு ?

ஆடுதுறை என்று வழங்கும் தலம், தென் குரங்காடு துறை என்று தேவாரத்தில் வருவது. திருவாடுதுறை என்பது திருவாவடுதுறை என்ற பெயரின் சிதைவு. அது வேறு தலம்.

120. அக்கமணி என்று ருத்திராட்சத்தைக் கூறு வதற்குக் காரணம் என்ன ?

அட்சமணி என்பதே அக்கமணி ஆயிற்று. சிவபெரு

மானுடைய கண்ணிலிருந்து துளித்த நீர் ருத்திராட்ச மாயிற்று. அட்சம் - கண். ருத்திரனது கண்ணிலிருந்து