பக்கம்:விடையவன் விடைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வகை 137

யுள்ள மாமன் மகனுக்கும், அக்காள் கணவனுக்கும் வழங்குகிறது.

5. வடக்கு இருத்தல் என்பது என்ன ? தம் உயிரைப்போக்கிக்கொள்ளவேண்டுவோர் வடக்குத் திசையில் சென்று உணவு முதலியவற்றை நீத்து இருத்தல்,

6. மணி மந்திர ஒளஷதம் என்பவை யாவை ?

விஷத்தைப் போக்கும் பரிகாரங்கள் மூன்று. விஷம் போக்கும் கல் உண்டு; அதுவே மணி. மந்திரத்தாலும் மருந் தாலும் போக்குவதுண்டு; அவையே மற்ற இரண்டும்.

7. புகழ்பெற்ற நான்கு வகைப் பொன் எவை ?

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூததம் என்பவை. சாத ரூபம் கிளிச்சிறை யாடகம், சாம்பூ நதமென் ருேங்கிய கொள்கையிற், பொலந்தெரி மாக்கள் (ஊர்காண் காதை 202.3) என்பது சிலப்பதிகாரம்.

8. ஒரு புத்தகத்தில், புலியின் வாயில் விழுந்து ஓர் அன்பு பழுத்த பெரிபவர் இறந்தார்’ என்றும், இன்றும் அமர வாழ்வு வாழ்கிருர்’ என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது. அவர் யார் ? . -

புத்தர் தம் உடம்பைப் புலிக்கு இரையாக அளித்தார் - என்று ஒரு வரலாறு உண்டு. நீங்கள் சுட்டும் புத்தகத்தின் ஆசிரியர் புத்தரையே எண்ணி எழுதியிருக்கிருர் என்று தோன்றுகிறது. வன்பசிக் கடும்புலிக் குடம்பளித்து என்பது ஒரு பழம்பாடல். . . . . . . * х

9. முக்குலத்தோர் என்பவர்கள் யார்? - ". . கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் மூன்று வகுப்பினர். . - :

10. கரிகாலன், தன் காலத்தில் யவன நாட்டில் வாழ்ந்து விடை-10