பக்கம்:விடையவன் விடைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 விடையவன் விடைகள்

வழக்கத்தைத் தமிழ் நூல்களில் காணலாம். சோனகம் என்பது ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்று. ஹாலந்து தேசத்தினராகிய டச்சுக்காரரையே ஒல்லாந்தர் என்று கூறுவர்.

33. கல்யாணச் சடங்குகளில் அம்மி மிதிக்கும் பழக்கம் எதற்காக வந்தது ?

'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து’ என்று சேர்த்துச் சொல்வது வழக்கம் அம்மி, கல்லான அகலிகையைக் குறிக்குமென்பர். அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது, அகலிகையைப்போல் இராமல் அருந்ததியைப் போல் இருக்க வேண்டும் என்று மணமகளை உணரச் செய்வதற்கே. அம்மி மிதிக்கும் வேத மந்திரத்தில், வாழ்வில் எத்தனே இடையூறு கள் வந்தாலும் இந்தக் கல்லேப் போல் நீ உறுதியாக இருக்க வேண்டும். அச்மேவ த்வம் ஸ் தி ரா ப வ” என்று மணமகளுக்குச் சொல்லியிருக்கிறது.

. 34. பதிமேகாதசங்க்ருதி' என்று வாழ்த்துகிருர்களே, அதன் பொருள் என்ன ?

  • தசாஸ்யாம் புத்ரா நாம்தேஹி பதிமேகாதசங்க்ருதி' என்பது இந்திரனைப் பார்த்து மணமகன் வேண்டும் மந்திரம். இவளைப் பத்துப் புத்திரர்களை உடையவளாகச் செய்து, அப்பால் இவள் என்னைப் பதினேராவது குழந்தையாகப் பாதுகாக்கும்படி செய்’ என்பது பொருள்.

35. மஞ்சள மங்கல பொருளாகக் கருதுகிருேம். ஆளுல் மஞ்சளை உரைத்துப் பெண்கள் கால்களில் தடவிக் கொள்கிருர்களே; அதல்ை அதன் புனிதம் கெடாதா ? ... . . .”

மஞ்சள் மங்கலப் பொருள் என்பது உண்மை. அதை உடம்பு முழுவதும் தேய்த்துக் கொள்வது வழக்கம் குதிகாலில் தேய்ப்பதனால் புனிதம் கெடாது. புனித நீராகிய கங்கையில் காலைக் கழுவுவது தவருகாது. அது போன்றதே இது.