பக்கம்:விடையவன் விடைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 விடையவன் விடைகள்

என்பது யமகம் என்பதற்குரிய தமிழ்ச் சொல். இப்போது யமகம் என்பது ஒரு பாட்டில் ஒவ்வோரடியிலும் சொல்லோ தொடரோ வெவ்வேறு பொருள் கருவதாக அமைவதையே குறிக்க வழங்குகிறது. ஒரடிக்குள்ளே அவ்வாறு வருவதை மடக்கு என்று சொல்கிருேம். தமிழில் பல யமக அந்: தாதிகள் உண்டு. திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, திருத்தில்லை யமக அந்தாதி போல்வன பல.

42. கழிநெடிலடி என்பது என்ன ?

செய்யுளின் அடிகள் ஐந்து வகைப்படும். இருசீரால் வருவது குறளடி, முச்சீரால் வருவது சிந்தடி, நாற்சீரால் வருவது அளவடி; ஐஞ்சீரால் வருவது நெடிலடி, அதற்கு மேல் வருவனவெல்லாம் கழி நெடிலடி.

43. எண்சீர் விருத்தத்தின் இலக்கணம் என்ன ? -

ஆசிரிய விருத்தங்களில் ஒன்று எண்சீர் விருத்தம். ஐந்துக்கு மேற்பட்ட சீர்களையுடைய அடிகளைக் கழிநெடி நெடிலடி என்பர். ஆதலால் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று பெயர். ஒரடியில் எந்த எந்த இடத்தில் எந்த எந்தச் சீர்கள் வருகின்றனவோ அவ்வாறே மற்ற மூன்றடிகளிலும் வரவேண்டும். இதை அளவொத்து வருதல் என்று இலக்கண நூல் கூறும். பல வகையான எண்சீர் விருத்தங்கள் உண்டு. அவற்றில் சிறப்பானவை இரண்டு. அரையடிக்கு இரண்டு காய்ச்சீரும் இரண்டு மாச்சீர்களும் வருவது ஒரு வகை. -

இருகாய்ச்சிர் இருமாச்சீர் அடியின் பாதி. இலகுவதோர் எட்டுச்சீர் விருத்தம் ஆகும்: என்பது போல வருவது அது. சித்தர் பாடல்களும் திருத் தாண்டகப் பாடல்களும் இவ்வகையில் சேர்ந்தவை.

மற்முெரு ഖഒട அரையடிக்கு மூன்று காய்ச்சிரும் ஒரு மாச்சீரும் வரும்,