பக்கம்:விடையவன் விடைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42, - விடையவன் விடைகள்

பருந்தெனும்புள் வேறு; கழுகாம் பறவை இருந்திடும்வே ருமென் றியம்பு. 170. உழுந்தென் றுளுந்தென் றுரைப்பதனைக் கண்டேன் பழுதெதுவோ ? ஏனே? பகர்வீர்-பொழுதெல்லாம், கன்னித் தமிழில் கதை, கவிதை, கட்டுரைகள், பன்னும் விடையவனே பார்த்து.

உழுந்தென்னும் சொல்லே உளதிலக்கி யத்தில்; அழுந்துபடவேவழக்கில் ஆர்ந்து-வழங்குவது மற்றை யுருவம்; வரும்ழளவின் ஒற்றுமையால் உற்றதிது வென்றே உணர். , 171. மங்களம், மங்கலம் என்ற இரண்டு சொற்களும் வேறு வேரு ? -

இரண்டும் ஒன்றே. லகர, ளகர ஒற்றுமை பற்றி இரு வேறு விதமாக வழங்குகின்றன. .

172. விதி,தெரு-இவற்றுள் எது சரி : இரண்டும் சரியே. வீதி என்பது வரிசை, ஒழுங்கு என்னும் பொருளுடைய வடசொல். தெரு என்பது தமிழ்ச் சொல். .

173. ບຸຕົDໃສrມr, பிரிமணையா-எது சரி ? x - புரிமணை என்பதுதான் சரி. வைக்கோல் புரியைச் சுற்றி மணையாக அமைப்பதால் வந்த பெயர்.

174. அவ்வையார், ஒளவையார்-எது சரி 2

ஒளவையார் என்பதே சரி. எதுகைபற்றி அவ்வையார். என்று பாடலில் சில சமயம் வரலாம். . - 175. ஆண, கட்டளை-இந்தச் சொற்களுக்குள் வேறு பாடு உண்டா ?