பக்கம்:விடையவன் விடைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 43

ஆணை என்பது ஆஜ்ஞா என்ற வடசொல்லின் திரிபு; கட்டளை என்பது தமிழ்ச்சொல். -

176. திருமதி, ரீமதி, செளபாக்கியவதி இவை மூன்றில் ஒரு பெண்ணைக் குறிப்பிடும்பொழுது எது பொருத்தமாக இருக்கும் - -

முன்பெல்லாம் எல்லாப் பெண்களையும் ரீமதி என்றும், தம்மினும் வயசு குறைந்தவர்களைச் செளபாக்கியவதி என்றும் சொல்லி வந்தார்கள். இப்பொழுதும் சிலர் அந்த வழக்கை ஆளுகிருர்கள். ரீமதி என்பது வடமொழியாக இருப்பதால் தமிழாக்க வேண்டுமென்று கருதிய சிலர் திருமதி என்று எழுதுகிருர்கள். ரீமான் என்பதைத் திருவாளர் என்று மொழிபெயர்த்தார்கள்; அது பழைய இலக்கியத்தில் கண்ட சொல்தான். ஆனல் பூரீமதி என்பதற் குச் சரியான மொழி பெயர்ப்பு, திருமதி அன்று; திருவாட்டி என்பதே சரி. -

177. ஞாயம் என்று எழுதுவது சரியா? கியாயம் என்பது affluir ? ^ - - - - . . . - #

நியாயம் என்பது இலக்கணத்தோடு பொருந்திய வடிவம்; ஞாயம் என்பது உலக வழக்குச் சொல். உலக வழக்குச் சொல்லும் அருமையாக இலக்கியத்தில் வருவ துண்டு.

. . 178. காவிரி, காவேரி-எது 好时]?

இரண்டும் சரி. தமிழில் காவிரியென்றும் வடமொழியில் காவேரி என்றும் வழங்கும். கவேரனுடைய மகள் ஆற்றின் வடிவில் வந்தமையால் காவேரியாயிற்று என்று வட ம்ொழி யாளர் காரணம் கூறுவர். செல்லும் இடந்தோறும் பொழில் களை வளர்ப்பதல்ை காவிரியாயிற்று என்று தமிழ் முறையில் காரணம் கூறுவர். மலைத்தலைய கடற்காவிரி என்று பத்துப் பாட்டிலும், நடந்தாய் வாழி காவேரி