பக்கம்:விடையவன் விடைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விடையவன் விடைகள்

என்று சிலப்பதிகாரத்திலும் இரண்டு வடிவங்க ளு ம் வந்துள்ளன. -

179. கவிஞர், பாவலர்-இரண்டுக்குமுள்ள ஏற்றத் தாழ் வினை விளக்குக. . . . . -

இரண்டும் ஒரே பொருளுடையன. முன்னையது வட சொல் திரிந்தது. பின்னது தமிழ்.

180. மெல்ல, மெள்ள-இவற்றில் எந்தச் சொல் மெது வ்ாக என்ற பொருளைத் தருகின்றது ? . .

இரண்டுக்கும் ஒரே பொருள்தான். மெல்ல என்பதே வழக்கில் மெள்ள என்று வருகிறது. . .

181. முன்னூறு ருபாய், முந்நூறு ருபாய்-எது சரி : மூன்று நூறு என்பதைக் குறிக்கும்போது முந்நூறு என்பதே சரி. -

182. கோயில், கோவில் கட்டிடம், கட்டடம் - இவற்றில் எவை சரியானவை ? . - -

யாவும் சரியானவையே. கோவில் என்பது விதியின்படி

அமைந்தது. கோயில் என்பது புறநடையால் அமைந்தது. கட்டிடம் என்பது இருசொல் அடங்கிய தொடர்; கட்டு.

இடம் என்பன இணைந்தது. கட்டடம் என்பது கட்டப்பட்

டது என்ற பொருளுடைய தனிச்சொல். -

. 183. குஞ்சியும் கூந்தலும் ஒரே பொருள் தருவதாயினும் குஞ்சி என்று வரும் இடத்தில் கூந்தல் என்று எழுதுவது பிழை என்கிருர்களே, எவ்வாறு ? . . . .

ஆண்களின் கேசத்தைக் குஞ்சி என்றும் பெண்களின் கேசத்தைக் கூந்தல் என்றும் கூறுவது பெரும்பான்மை மரபு. சிறுபான்மை குஞ்சி என்பது மகளிர் கூந்தலுக்கும்