பக்கம்:விடையவன் விடைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 47

193. இருபத்தியைந்து: முப்பத்தியாறு, காற்பத்தியேழு என்று சிலர் எழுதுகிருர்கள். இவை சரியா?

இருபது ஐந்து என்ற இரண்டும் சேர்ந்தால் இருபத் தைந்து என்றுதான் வரும்; அப்படியே முப்பத்தாறு, நாற் பத்தேழு என்று எழுதுவதுதான் சரி. .

194. இலக்கியம், இலக்கணம் என்ற இரண்டு சொற். களும் ஒன்ருக எங்கேனும் வருகின்றனவா? -

அகத்திய சூத்திரம் என்று வ்ழங்கும் ஒன்றில், எள்ளி னின் றெண்ணெய் எடுப்பது போல. இலக்கியத்தினின் றெடு படுவ திலக்கணம்’ என்று வருகிறது. அதன் நடையைப் பார்க்கும்போது அது பழைய சூத்திரமென்று உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால் நன்னூலில் இலக்கியங் கண்ட தற் கிலக்கணம் இயம்பலின்’ என்று வருகிறது. -

195. தேமேண்ணு இரேன் என்கிருர்களே அதன் பொருள் என்ன?

தெய்வமே என்று இருப்பாயாக’ என்பது பொருள். தெய்வமே என்று என்ற தொடர்ே தேமேண்ணு' என்று, பேச்சு வழக்கில் சிதைந்துவிட்டது. சும்மா இரு என்ற பொருளில் வழங்குகிறது.

196. நாணயம் என்பது ரூபாய் நாணயத்தையும் ஒரு மனிதனின் நேர்மையையும் குறிக்கிறது; காநயமா, நாணயமா?

நாநயம் என்பதே நாளடைவில் மருவி நாணயமாயிற்று. மருஉ மொழிகள் இலக்கண விதிப்படி மாறும் என்பது இல்லை. நயம் என்பதற்கு நீதி என்று பொருள் உண்டு. நியாயமான சொல்லையுடைமைக்கு நாநயம் என்று வழங்கி, அப்பால் அதற்குக் காரணமான பண்பையும் குறிக்கலா யிற் று.