பக்கம்:விடையவன் விடைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விடையவன் விடைகள்

232. கந்தமல சிற்கடவுள் தன்வரவு காணும், இந்திர னென என்று கம்பராமாயணத்தில் கையடைப் படலத்தில் வருகிறது. கஞ்ச மலர் என்று தாமரையைச் சொல்லக் கேட்டி ருக்கிறேன. இங்கே கந்த மலர் என்று வருகிறதே, எப்படி ?

மலர் என்பதே தாமரையைக் குறிக்கும் சொல். கந்தம் என்பது அதற்கு அடை, மணம் என்ற பொருளுடையது. மணம் உள்ள தாமரை மலர் என்பது பொருள்.

233. கூன் கொண்டு சென்றவன்.மாதவனே.இதன் பொருளை விளக்குக.

இந்தப் பாட்டின் திருத்தமான பாடம் வருமாறு : கனென்று சென்றவன் தான்நிமிர்ந் தோடக் குருடன் கொம்புத், தேனென்று காட்ட முடவன் குடங்கொண்டத் தேன்பிழியத், தான்நின்ற ஊமை தனக்கென்று கேட்கத் தருவர்வரம், வான்நின்ற சோலே புடைசூழ் வடமலை மாதவரே.” திருவ்ேங்கடமுடைய பெருமாள் தம்மைப் பணி வாருடைய உறுப்புக் குறைகளை நீக்கியருள்வார் என்ற கருத்தைத் தொடர்ச்சியாக அமையும்படி இணைத்துப் பாடியது இது. - -

234. ஏற்பது இகழ்ச்சி என்ற ஒளவையார் ஐயமிட்டுண் என்று சொன்னர்; முரண்பாடு அல்லவா ? -

ஏற்பது இகழ்ச்சி என்பது உண்மையானலும் உலகில் வறியவர்கள் இருக்கத்தான் இருக்கிருர்கள். அவர்களுக்கு உதவுவது கடமை. கேளாமலே கொடுப்பதும் உண்டு. அப்போது ஏற்காதவர்களுக்கும் ஐயம் கிடைக்கும். -

235. ஐந்தவித்தா ற்ைறல் அகல் விசும் பு ளார் கோமான், இந்திரன்ே சாலும் கரி என்று திருக்குறள் சொல்கிறது. இந் தி ர ன் புலனடக்கத்துக்காகப் புகழ் பெற்றவன் அல்ல. அப்படியிருக்கப் புலன்களை அடக்கிய