பக்கம்:விடையவன் விடைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w

என்றும் பல அன்பர்கள் சொன்னர்கள்; எழுதினர்கள். அதளுல் அவற்றைத் தொகுத்தேன். செய்தியளவில் உள்ள சிலவற்றை விலக்கிவிட்டு மற்றவற்றை இப்போது வெளி பிடுகிறேன்.

நான் எழுதிய விடைகள் யாவும் இத் தொகுதியில் சேர வில்லை. கேள்வி கேட்பவர்களுடைய பெயரைக் கலைமகளில் வெளியிட்டு வந்தேன். இப்போது அவற்றை வெளியிட வில்லை. ஆனலும் வின எழுப்பியவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அ. வ ர் க ள் கேட்ட்தல்ைதான் இந்த விடைகள் உருவாயின.

சிலர் கேட்ட கேள்விகள் என் சிந்தனையைத் துரண்டி விட்டன. சரணகமலாலயத்தில் அரை நிமிட நேரமட்டில்’ என்று அருணகிரியார் பாடிய திருப்புகழில் வருகிறது. ‘நிமி டம் என்று பாடியிருக்கிருரே; அவர் காலத்தில் நிமிஷம், மணி என்ற காலக்கணக்கு வந்துவிட்டதா?’ என்று ஒர் அன்பர் கேட்டார். அது வரை யி ல் அதைப் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை. மற்றவர்களுக்கும் அப்படித் தான் என்று நினைக்கிறேன். அவருடைய கேள்வியைக் கண்ட பிறகே அதைப் பற்றி ஆராயத் தலைப்பட்டேன். ஒரு மாத் திரைப் போதையே நிமிஷம் என்று அவர் சொல்கிருர் என்று விளங்கியது. அதை விடையில் விளக்கினேன்.

சில கேள்விகளுக்கு உரிய நூல்களைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்து விடை எழுதவேண்டியிருந்தது. அறுபத்து நான்கு கலைகள் எவை என்று கேட்பதும், ஏழு கிழமைகள் எவை என்று கேட்பதும் ஒன்ருகுமா? முன் கேள்விக்கு நூல்களைப் பார்த்துத் தெரிந்து விடை எழுதின்ேன். - -

சில தமிழ்ப் புலவர்கள் பா வடிவத்தில் தம்முடைய

விளுக்களை எழுப்பினர். அவற்றிற்கு நானும் பாவாலே விடை இறுத்தேன். - - . . .

பொருள் விளங்காத કીઝ செய்யுட்களுக்கு விளக்கம் இந்த விடைகளில் இருக்கும். பலர் பலபல பாடல்களை எழுதி