பக்கம்:விடையவன் விடைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 61

246. 'மங்கை யழலும் வாளுட்டு

மயில்கள் அழுதார்; மழவிடையோன் பங்கில் உறையும் குயில்அழுதாள்;

பதும மலர்மேல் மாதழுதாள், கங்கை.அழுநாள்; நாமடங்தை

அழுதாள்; கமலத் தடங்கண்ணன் தங்கை அழுதாள்; இரங்காத

அரக்கி மாரும் தளர்ந்தழுதார்.”

(கம்பராமாயணம்) இந்தப் பாடலில் மழவிடையோன் பங்கில் உறையும் குயில்' என்பது பார்வதியைக் குறிக்கும் என்று தோன்றுகிறது. ஆகவே, கமலத்தடங் கண்ணன் தங்கை என்ற தொடரின் பொருள் என்ன ? .." -

கண்ணன் தங்கையாகப் பிறந்த துர்க்கை என்று பொருள் கொள்ள வேண்டும். பார்வதியும் துர்க்கையும் சக்தியின் வேறு வேறு அம்சங்கள்.

247. மணிமேகலையில் வரும் மணிபல்லவத் தீவு இப்போது இருக்கிறதா ? - - -

யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நயின தீவு என்பதே மணி பல்லவத் தீவு என்று சொல்கிருர்கள். தக்க சான்றுகளால் நிறுவப் பெறவில்லை. " . . . .

- 248. வங்கக் கடல் கடைந்த மாதவனே என்று ஆண்டாள் பாடியது வங்காளக் குடாக் கடலேக் குறிப்பதா?

வங்கம் என்பது கப்பலக் குறிக்கும் சொல். கப்பல் ஒடும் கடல் என்று பொருள் கொள்ள வேண்டும். -

z - - -

249, உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி என்ற திருப்புகழ் அடிக்குப் பொருள் என்ன ? - ... . . ."