பக்கம்:விடையவன் விடைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 * விடையவன் விடைகள்

பொருந்தும். நரி என்பது சிறும்ையைக் குறிக்க இணைக்கும் சொல். நரிப்பயறு, நரிக்குழி என்பவற்றை வழக்கிலே கேட்கலாம்.

257. 'இம்மை யறையனைய வேசூர மாதருமா, இம்மை ുമെ யிம்மையையோ வென்செய்த - தம்மைமதன், மாமாமா மாமாமா மாமாமா மாமாமா, மாமாமா மாமாமா மா - இந்தப் பாடல் திருவருட்பாவில் வெறி விலக்கு என்ற தலைப்பின்கீழ் வருகிறது. இதன் பொருள் என்ன ?

தலைவி களவுக் காலத்தில் தலைவனைப் பிரிந்திருத்தலைத் தாங்காமல் மெலிவுற்றபோது அவளுடைய தாயும் பிறரும் பூசாரியை அழைத்து வந்து, ஆட்டைப் பலி கொடுத்துத் தெய்வத்துக்குப் பிரீதி பண்ணச் சொல்கிருர்கள். அப்போது தோழி அதை விலக்குகிருள். பூசாரியைக் கொண்டு செய்யும் இதற்கு வெறியாட்டு என்று.பெயர். ஆவேசம் வந்து ஆடுவாத ல்ை அப்பெயர் வந்தது. அதை விலக்குவது வெறி விலக்கு என்னும் துறை. அகப்பொருள் துறைகளில் ஒன்று. இம்மை யல் தையல் நைய-தலைவனிடம் கொண்ட இந்த மோகத் தால் தலைவி வருந்த, ஏசு ஊர மாதரும் பெண்களும் பலவகை யான பழிச் சொல்லைப் பரவச் செய்ய, ஆ - என்ன வியப்பு, இம் மை-இந்த ஆடு, உமை.உங்களை, இம்மை - இப் பிறப்பில், ஐயோ என் செய்தது-ஐயோ பாவம் ! என்ன செய்தது? (ஒன்றும் செய்யாத இதை வெட்டலாமா?), அம்மை-தாயே மதன்.(இதைக் கண்டு) மன்மதன், மாமாமா மாமா.அஞ்சுமா (அஞ்சுவான?), மாமாமா மாமாமா.(இவள் துன்பம் இதல்ை) ஆறுமா, மாமா மாமா மாமா மாமா-(இந்தப் பரிகாரம் தலை வனுக்கு) எட்டுமா?

பின் இரண்டடிகளில் பத்தொன்பது மாக்கள் இருக் கின்றன. அவற்றை மூன்முகப் பிரித்து, அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று குறிப்பாகப் பாட்டில் பொருள் செய்து கொள்ளவேண்டும். - . . -