பக்கம்:விடையவன் விடைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 75

வாய் என்பதற்குத் தனியே ஒரு சொல் இல்லை, வாக்கு என் பதும் முகம் என்பதும் ஆகுபெயர்களாக நின்று வாயைக் குறிக்க வழங்குமேயன்றி, இயல்பாக ஒரு சொல் இல்லை. தமிழில் மூஞ்சி என்று ஒரு சொல் முகத்துக்கு உண்டு என்று சொல்வதுண்டு. ஆனல் இழித்துக் கூறும்போது அது வழங்குமேயன்றி மற்றச் சமயங்களில் வழங்குவதில்லை.

2.90. கரணம் தப்பினுல் மரணம்’ என்ற பழமொழியின் பொருள் என்ன?

மூங்கிலின்மேல் நின்று கரண்ம் போடும் கூத்தாடி தவறினல் மரணம் உண்டாகும் என்று சிலர் பொருள் சொல்வதுண்டு. அதைவிடச் சிறந்த பொருள் உண்டு. களவிலே காதல் செய்த இருவர் பிறகு உலகறியத் திருமணம் செய்துகொண்டு வாழ்வது பழந்தமிழர் மரபு. நூல்களில் களவு, கற்பு என்று இந்த இருவகை வாழ்க்கையையும் புலவர் கூறுவர். களவிலே உள்ளம் ஒன்றுபட்ட காதலர்கள் மனம் புரிந்து கொள்ள இயலாத நிலை உண்டானல் இறந்து விடுவார்கள். கற்புக்குக்கேடு வருமென்று அஞ்சி இறப்பார் கள். இந்தக் கருத்தையே அந்தப் பழமொழி கூறுகிறது. கரணம் என்பது மணவினையைக் குறிப்பது,

பொய்யும் வழுவும் புகுந்த பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப

- என்பது ଈ தால்காப்பியச் சூத்திரம்.

291. அவன் ஒரு பாட்டம் அழுது தீர்த்தான், - - அவளுடைய ஆட்டம் பாட்டம் சொல்லி முடியாது-பாட்டம் :

என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுங்கள், -- a

முதல் பாட்டத்துக்கு ஒரு முறை என்று பொருள். மழை ஒரு முறை பெய்தால் ஒரு பாட்டம் பெய்தது'என்பர். அதை எண்ணி, ஒரு பாட்டம் அழுது தீர்த்தான் என்று