பக்கம்:விடையவன் விடைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் π

வேண்டும். இலைமறைவு காய்மறைவாக ஆழம் பார்ப்பது: என்பதும் இலை மறைவில் காய் மறைந்திருப்பதை நன்முகப் பார்த்துக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கருத்தை உடை யது. மேற்போக்காகப் பார்த்தால் தெளிவாகத் தெரியாத ஒன்றை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் என்பதே பொருள்.

295. கடபடா என்று உருட்டுகிருர்கள்' என்று சொல் கிருேம். என்ன பொருள் ? - .

கடம் என்பது குடம். படம் என்பது துணி, தர்க்க சாஸ்திரத்தில் கடத்தில் படம் இல்லை, படத்தில் கடம் இல்லை என்று சொல்வார்கள். இப்படிக் கடம், படம் என்ற சொற்களைச் சொல்லித் தர்க்க சாஸ்திரிகள் பேசும்போது மற்றவர்களுக்கு எளிதில் விளங்காது. அதனல், கடம் படம் என்று சொல்லி உருட்டுகிறர்கள் என்று சொல்லும் வழக்கு வந்தது. அதுவே மாறி வேறு வகையில் வழங்குகிறது.

296. கல்லாடம் படித்தவர்களிடம் சொல்லாடாதே என்பதில் குறிப்பிடும் கல்லாடம் என்ற நூல் எத்தகையது:

கல்லாடனர் என்னும் புலவர் அகத்துறையில் பாடிய நாறு அகவற்பாக்களை உடைய நூல் அது. திருக்கோவை யாரிலுள்ள துறைகளை விரித்து அமைத்தவை அவை; திருவாலவாய்ப் பெருமானப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. இந்த நூலே இறைவன் திருமுன் அரங்கேற்றிய போது ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு முறை அப்பெரு

மான் தலையை அசைத்ததாக ஒரு வரலாறு வழங்குகிறது.

297. கணியன் பூங்குன்றஞர் என்ற புலவர் பெயரில் வரும் கணியன் என்பது அவருடைய இயற்பெயரா?