பக்கம்:விடையவன் விடைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 விடையவன் விடைகள்

கணியன் என்பது சோதிடனைக் குறிப்பது; گاهfيتمي புலவருடைய இயற்பெயர் அன்று; அவர் சோதிடம் வல்லவ ராதலின் அந்தச் சிறப்புப் பெயர் அவருக்கு அமைந்தது. பூங்குன்றம் என்பது அவர் வாழ்ந்த ஊர்.

298. பெரிய புராணம் பாடிய சேக்கிழாருக்கு அந்தப் பெயர் இயற்பெயரா? காரணப் பெயராளுல் அதற்குக் காரணம் என்ன? இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லையா ?

சேக்கிழார் என்பது குலத்தின் பெயர். - அவருடைய இயற்பெயர் இராமதேவர் என்பது கல்வெட்டினல் தெரி கிறது. -

299. டாக்டர் உ. வே. சா. செய்யுள் நூல்கள் இயற்றியிருக்கிருர்களா ?

அவர்கள் பாடிய பாடல்கள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அங்கயற்கண்ணி மாலே முதலிய பிரபந் தங்களும் உண்டு. டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், திருவான்மியூர், சென்னை என்ற இடத்தில் கிடைக்கும். . . . . - - - . . . .

300. நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவரா? . . . -- -

சனகாபுரம் என்ற ஊர் கொங்கு நாட்டில் உள்ளது. அங்கே பிறந்தவர் பவணந்தி. -

301. படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது எதைப்பற்றிக் கூறுகிறது:

தவருகப் படிப்பவனயும் தவருக எழுதுபவ்னேயும். எண்ணிச் சொன்னது. பிழைபட ஒரு பாட்டை ஒருவன்