பக்கம்:விடையவன் விடைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விடையவன் வீடைகள்

305. நான்கு பேர் மத்தியில் நான்கு பேர் மதிக்கும்படி: என்றெல்லாம் வழக்கில் வருகின்றனவே, அந்த நான்கு பேர் யார்? தாய், தந்தை, குரு, தெய்வமா? அல்லது வேறுயாரேனுமா?

பொதுவாகச் சில என்பதைச் சுட்டுவதற்கு நாலு என் றும். மிகச் சில என்பதைச் சுட்டுவதற்கு இரண்டு என்றும் சொல்வது தமிழர் வழக்கு. நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி என்ற பழமொழி அதைச் சுட்டுகிறது. நாலு காசு கிட்ைத்துவிட்டால் துள்ளிக் குதிக்கிருன்’, ‘இரண்டு ஊருக் குப் போனுல் உண்மை தெரிகிறது என்பவை போன்ற இடங் களில் வரும் நாலு, இரண்டு என்ற சொற்கள், குறிப்பிட்ட அந்த எண்ணலளவையே சுட்டுகின்றன என்று சொல்ல இய லாது. அந்த வகையில் பொதுவாகச் சிலர் மத்தியில் என்று சொல்லுவதையே, நாலு பேர் மத்தியில் என்று சொல் கிருேம், நாலு பேர் போன வழி என்று சொல்லும்போது சைவசமயாசாரியர் நால்வரைக் குறிப்பதாகக் கொள்வது சைவர்கள் மரபு.

306. திகைப்பூண்டை மிதித்தாற் போல என்று சொல் கிருர்களே.-அதற்குப் பொருள் என்ன?

திகைப்பூண்டு என்பது தன்னை மிதித்தவர் மனத்தில் மயக்கத்தை உண்டாக்கிக் கலங்கச் செய்யுமாம். அதல்ை தெளிவின்றி மயங்குவதைக் குறிக்கும்போது இப்படிச் சொல்கிருர்கள்; திகை எ ன் பது மயக்கத்தைக் குறிக்கும் சொல். - - -

307. வெள்ளிடை மலை என்பதற்கு விளக்கம் தருக.

வெள்ளிடை என்பது திறந்த வெளிக்குப் பெயர். திறந்த வெளியில் மலை இரு ந் தால் அது விளக்கமாகத் தெரியும். தெளிவாக உள்ளவற்றை வெள்ளிடை மல்ே என்று சொல்வது வழக்கம். - . . .