பக்கம்:விடையவன் விடைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 85.

இலக்கண விளக்கத்தை இயற்றிய வைத்தியநாத தேசிகர்.

323. நான்மணிக் கடிகை என்ற சங்க நூலை இயற்றிய வர் யார் ? எந்தக் காலத்தில் வெளிவந்தது ? அந்தப் பெயருக்குக் காரணம் என்ன ?

நான்மணிக் கடிகை சங்க காலத்து நூல் அன்று. அது பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று. அதனை இயற்றியவர் விளம்பிநாகனர். நான்கு மணிகள் இணைந்த சிறிய மாலைபோல ஒவ்வொரு பாட்டிலும் நான்கு நான்கு நீதிகளைக் கூறுவதல்ை நான்மணிக் கடிகை என்று பெயர் பெற்றது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள்கள் நான்கைப்பற்றிய நீதிகளே அதில் காணலாம். கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டுடன் 103 வெண்பாக்களை உடைய நூல் அது. - -

324. திருநேரிசைப் பதிகம் யாரால் பாடப்பட்டது ?

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய பல பதிகங்கள் திருநேரிசையாக உள்ளன,

325. நீதி வெண்பா என்ற நூல் ஒளவையார் இயற்றியதா ? . .

- வடமொழியில் உள்ள Lಖ நீதி சுலோகங்களின் மொழி பெயர்ப்பு நீதி வெண்பா; ஒளவையார் இயற்றியது அன்று; ஆசிரியர் பெயர் தெரியவில்லை. -

326. . அருமப் புராணத்தைப் பாடியவர் யார் *

- பண்டித, வித்துவான் திரு. நா. கனகராசையர். இருபத்து நாலாயிரம் பாடல்களால் அநுமனுடைய வரலாற்றைப் பாடியிருக்கிருர். அது இன்னும் அச்சாக வில்லை.