பக்கம்:விடையவன் விடைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விடையவன் விடைகள்

எட்டாந் திருமுறையாகவும், திருவிசைப்பாவை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமந்திரத்தைப் பத்தாம் திருமுறை யாகவும், ஆலவாய் இறையனர் பாடிய திருமுகப் பாசுரம், காரைக்காலம்மையார் பாடிய பாட்ல்கள் முதலியவற்றைக் கூட்டிப் பதினேராம் திருமுறையாகவும் அமைத்தார். பிற்காலத்தில் பெரிய புராணத்தைப் பன்னிரண்டாம் திரு முறையாகச் சேர்த்துக்கொண்டார்கள்.

334. கந்தர் அநுபூதியை யல்லாமல் அநுபூதி என்ற பெயருடைய வேறு நூல் உண்டா ?

அதுமார் அநுபூதி என்ற நூல் ஒன்று உண்டு; அருணசலக் கவிராயர் பாடியதாகக் கூறுவர்.

335. பத்துப்பாட்டில் படிக்குப் பாதி ஆற்றுப் படைகள் இருக்கின்றன என்று ஒரு புலவர் கூறினர். புத்தகத்தில் திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணுற்றுப் படை, பெரும்பாணுற்றுப்படை என்று நான்கு ஆற்றுப் படைகளே உள்ளன. அவர் எவ்வாறு ஐந்து என்று கூறினர் ?

- பத்துப் பாட்டின் இறுதிப் பாட்டாகிய மலைபடுகடாம்' என்பது கூத்தராற்றுப்படை என்றும் பெயர் பெறும். ஒரு கூத்தன் வேறு கூத்தரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது அந்தப் பாட்டு. அதையும் சேர்த்தால் ஐந்து ஆற்றுப் படைகள் ஆகும். . . . . . o . . . "

336. திருவிளையாடற் புராணங்கள் ഒങ്ങ് உண்டு. என்கிருர்களே, விளக்கம் தருக. . . . . .

பழைய திருவிளையாடற் புராணம் ஒன்று உண்டு; அதைத் திருவாலவாயுடையார் திருவிளையாடல் என்று கூறுவர்.

அதை இயற்றியவர் செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர். இதல்ை நம்பி திரு விளையாட ல்