பக்கம்:விடையவன் விடைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 89

என்றும் வழங்கும். டாக்டர் உ. வே. சா. அவர்கள் அதைப் பதிப்பித்திருக்கிரு.ர்கள். பிற்காலத்தில் தோன்றிய திருவிளை யாடற் புராணம் பரஞ்சோதி முனிவர் இயற்றியது.

337. கந்தர் சஷ்டி கவசம் என்னும் நூல் பாராயணம் செய்யத் தக்கதுதான ? அதன் ஆசிரியர் வேறு நூல்கள் யாத்துள்ளாரா ?

தேவராய சுவாமிகள் பாடிய கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்யத் தக்கதே. பலர் இதல்ை பயன் பெற்றுள்னனர். அவர் இதையும் சேர்த்து ஆறு படை வீடுகளுக்கும் ஆறு கவச நூல்கள் இயற்றியதாக இப்போது தெரிகிறது. சமீபத்தில் சில அன்பர்கள் இந்த ஆறையும் அச்சிட்டிருக்கின்றனர்.

338. திருப்புகழின் மொத்தப் பாடல்கள் எத்தனை : இப்போது கிடைப்பவை எத்தனை ? அவற்றிற்கு உ ைர உண்டா ?

'ளம் அருணகிரிந்ாதர் ஒது பதினருயிரம் திருப் புகழமுதுமே என்று அந்தக்கவி வீரராகவமுதலியார் என்ற புலவர் சொல்வதால் 16,000 திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினர் அருணகிரிநாதர் என்று தெரியவருகிறது. ஆனல் இப்போது கிடைப்பவை 1304 பாடல்களே. இவற்றுக்குத் தணிகைமணி வ. சு. செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் உரை எழுதியிருக்கிருர். - .

339. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய பண்டைத் தமிழறிஞர்கள் யாவர் ? -

அரும்பதவுரை ஒன்று உண்டு; அதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. மற்ருேர் உரையை எழுதியவர் அடியார்க்கு நல்லார். ‘. . . . . .

விடை-7