பக்கம்:விடையவன் விடைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விடையவன் விடைகள்

340. பதினெண் புராணங்கள் யாவை ?

மச்சபுராணம், கூர்ம புராணம், வராக புராணம், வாமன புராணம், சிவமகா புராணம், இலிங்க புராணம், பவிஷ்ய புராணம், கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், பிரம்மாண்ட புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், கருட புராணம், நாரதீய புராணம், பிரம்ம புராணம், பத்ம புராணம், ஆக்கினேய புராணம், பிரம்மவைவர்த்த புராணம் என்பன. -

341. சர்க்கரைப் புலவர் அட்டநாகபந்தமாக வரைந்த சித்திரகவி தனிப்பாடல் திரட்டில் உள்ளதா ? மயூரகிரிக் கோவை நூல் வடிவில் இருக்கிறதா ?

அட்டநாக பந்தம் கிடைக்கவில்லை. மயூரகிரிக் கோவை அச்சிடப்பெற்றிருக்கிறது.

.342. உண்டா ?

இல்லை.

தொல்காப்பிய நூலுக்குக் கடவுள் வாழ்த்து

343. ஐஞ்சிறு காப்பியங்கள் எவை ?

உதயணகுமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி. ஐஞ்சிறு காப்பியம் என்ற வழக்கு மிகப் பிற்காலத்தில் உண்டாயிற்று. இதைப் பற்றிய விரிவான கருத்துக்களைத் தமிழ்க் காப்பியங்கள் என்ற நூலில் காணலாம். . -

344. திருமுருகாற்றுப்படையின் பொருளமைதி ஆற்றுப் படை இலக்கணத்துக்கே முரளுனது என்ற கருத்து வழங்கு. கிறது; தங்கள் கருத்து என்ன ? -

ஆற்றுப்படை என்ற பெயரும், புலம்பிரிந்துறையும். நலம்புரி கொள்கைச் செலவுநீ நயந்தனை யாயின் என்று