பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:98 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ (காவற்கர்ரர்கள் இருவரில் ஒருவன்) தெரியும் அரசே. ஆன்ழெல் : கோட்டையில் இன்று போர்வீரர்கள் மிகுதி யாக இருக்கின்றார்கள். ஒருவருக்கும் தெரியாமல் நீங்கள் அங்கே போக முடியுமா? திரும்பி வர முடியுமா? - - காவற். ஒருவன் : ஒருவர் கண்களிலும் படாமல் போய்த் திரும்பி வர இரகசிய வழி இருக்கிறது அரசே! ஆன்ழெல் : சரி-(பூஜை அறையைக் காட்டி) அங்கே ஒரு பெண் இறந்து கிடக்கிறாள். கல்லறையில் ஒரு குழி தோண்டப்பட்டிருக்கிறது. அங்கே அவளை எடுத்துப் போய் அடக்கம் செய்து விடவேண்டும்-தெரிகிறதா? காவற். ஒருவன் : அப்படியே அரசே! - ஆன்ழெல் : (தீஸ்புைப் பார்த்து) யாவும் மறைவாக நடக்க வேண்டும். கவனித்துக் கொள். (ஆன்ழெல்லோ போகிறார்) . - திஸ்ப் : (ஒரு பண முடிப்பை எடுத்து அவர்களிடம் கொடுத்து) இருநூறு பொன் நாணயங்கள் இதிலிருக் கிறது. நான் சொல்வதைப்போல் நடந்தால் நாளைய காலையில் இதைப்போல் இருமடங்கு உங்களுக்கு என்ன சொல்கிறீர்கள். - (காவற்காரர்கள் பணமுடிப்பை வாங்கிக்கொண்டு) அப்படியே செய்கிறோம் அம்மா. எங்கே போக வேண்டும். திஸ்ப் : முதலில் கல்லறைக்கு. களம்-12 - தீஸ்ப்-இராக்காவற் காவலர் இருவர்-ஒரு வேலைக்காரன் (கத்தேரினா-பிணத்தின் மேல் இடும் துணியால்