பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ தீஸ்ப் : உன்னிடம் சொன்ன குதிரைகள்: தயாராக இருக்கின்றனவா? o வேலைக்காரன் : சேணத்தோடு தயாராக இருக்கின்றன. தீஸ்ப் : நல்ல குதி ைகளா? வேலைக்காரன் ; அருமையான குதிரைகள். திஸ்ப் : சரி-(இராவேலைக்காரர்களைப் பார்த்து) நல்ல குதிரைகளாக இருந்தால் இந்த வேனிஸ் எல்லையைத் தாண்டிப் போக எவ்வளவு நேரம் செல்லும்? இராக் காவல் : குறுக்கு வழியாகத் தாண்டிச் செல்வதா யிருந்தால் மூன்றே மூன்று மணிநேரம் போதும். வழி நல்லவழி. - திஸ்ப் : சரி நீங்கள் போகலாம். நாளைக்கு வந்து உங்கள் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள். இங்கு நடந்ததைப்பற்றி வாயைத் திறக்கக்கூடாது-நினை விருக்கட்டும் தெரிகிறதா?-சரி போங்கள் - (இராக் காவலர் போகின்றனர்) (வேலைக்காரனைப் பார்த்து) நீ இந்த அறைக்கதவை மூடு. எந்த அவசர மாக இருந்தாலும் யாரையும் உள்ளே விடாதே. வேலைக்காரன் : ரொதோல்போ வருகிற வழியைக்கூட வா மூடிவிட வேண்டும். அவர் அடிக்கடி அந்த வழியாகத்தான் வருகிறார். அதைக் கூடவா அம்மா மூடிவிடவேண்டும். . . . - திஸ்ப் : வேண்டாம். அதை மூடாதே. அவர் வருவதாக இருந்தால் வரட்டும். மற்றவர்களை விடாதேதெரிகிறதா அவர் மட்டுந்தான் வரலாம். வேறு யார்ையும் எந்த அவசரமாக இருந்தாலும் விடாதேநீ கூட நான் கூப்பிட்டால்தான் வரவேண்டும். போ. கதவை மூடிவிட்டுப்போ. - (வேலைக்காரன் போகிறான்)