பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் - I 11 செய்தேன். சர்வாதிகாரியை ஏமாற்றி நஞ்சுக்குப் பதில் மயக்கமருந்தை கொடுத்தேன், அவள் இறந்து விட்டதாக யாவரும் நம்பினார்கள். அவள் இறக்க வில்லை. தூங்கிக் கொண்டிருந்தாள். அதோ குதிரைகள் தயாராக இருக்கின்றன. இதோ ஆண் உடை அவளுக்காகப் புறப்படுங்கள். மூன்றுமணி நேரத்திற்குள் எல்லையைத் தாண்டிவிடலாம். வேனிஸ் எல்லையைக் கடந்துவிடலாம். அங்கே இவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. சர்வாதிகாரிக்கு இவள் செத்துவிட்டாள்; உனக்கு உயிரோடிருக் கிறாள்; எப்படி என் திட்டம்? சிறந்ததுதானே? ரொதோல் : கத்தேரினா!... திஸ்ப்.... - - (மேல்மூச்சு இழுத்துக் கொண்டிருக்கிற தீஸ்பின் அருகில் மண்டியிடுகிறான்.) - திஸ்ப் : (மங்கிய குரலால்.) நான் சாகப்போகிறேன். எப்பொழுதாவது என்னைப் பற்றி நினைப்பாய் பாவம். தீஸ்ப் எவ்வளவு நல்லவள் தெரியுமா? எனக்காக எத்தகைய செயல் செய்தாள்? என்பாய். ஆம், அதுவே போதும் எனக்கு; அந்தச் சொற்கள் என் கல்லறையில் என்னை மகிழ்விக்கும், நான் பிரிகிறேன். இந்த உலகத்தை விட்டுப் பிரிகிறேன் - என் அன்பை - உயிரை - காதலை விட்டுப் பிரிகிறேன். என் ரொதோல்போ - க த் தே ரி னா என் ரொதோல்போ என்பதற்காக என்னை மன்னி யுங்கள். என் ரொதோல்போவை விட்டுப் பிரிகிறேன் ரொதோல்போ ரொதோல்போ! உடனே புறப் படுங்கள். கிளம்புங்கள்.- நிற்கக் கூடாது. சிறிது. நேரம் கூட இனி இங்கே இருக்கக்கூடாது. நான் சாகிறேன். நீங்கள் வாழுங்கள். ஆம் நீங்கள் வாழ்வதில்தான் எனக்கு இன்பம். நான் உங்களை வாழ்த்துகிறேன். - - - - - - - சாகிறாள்