பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் I I வேனிஸ் பிரபுக்களைத் தாக்குகின்ற அடிகள் ஒன்றிரண்டு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டாள். அங்கு வந்த வேனிஸ் மந்திராலோசனை குழுத் தலைவன் மீண்டும் பாடச் சொல்லிப் பார்த்தான். தன்னோடு வந்த படைத்தலைவனை விளித்து என் தாயைத் துரக்கிவிடக் கட்டளையிட்டான். அவள் என்ன செய்வாள் பாவம்! வாய் திறக்கவே இல்லை. திறந்துதான் என்ன பயன் வேனிஸ் ஆட்சியில்? அவள் என்னை இறுக அணைத்தாள். முத்தமிட்டாள். அவள் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந் தோடியது. அவள் சாவிற்காக அழவில்லை. என்னைத் தனியே எப்படி இந்தக் கொடிய உலகத்தில் விட்டுச் செல்வதென்பதற்காகவே அழு திருப்பாள். அவளிடத் திலே ஒரு பித்தளைச் சிலுவை இருந்தது. அதில் என் பெயரை தீஸ் ப்' என்று தன் கத்தியின் முனையால் எழுதி வைத்திருந்தாள். அதை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். தன் கழுத்திலே கட்டிக்கொண்டாள். அப்பொழுது எனக்கு வயது பதின்மூன்று. அழவோ, கூச்சலிடவோ என்னால் முடியவில்லை. ஆடாது அசையாது பயத்தால் வெளுத்துக் குன்றிப் பேசமுடியாத நிலையிலே ஏதோ கனவிலே பார்ப்பதைப்போல் என் தாயை அந்தப் போலீஸ்காரர்கள்-ஈவு இரக்கமற்றவர்கள் கட்டி இழுத்துக்கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அங்குக் கும்பல் கூடிவிட்டது. ஒருவ னாவது வாய் திறந்து இந்த அடாத செயலைப் பற்றிக் கேட்கப் போகிறான். அந்தக் குழந்தைக்கு இருந்த இரக்கங்கூட அங்குக் கூடியிருந்த மக்களுக்குக் கிடையாது. அவ்வளவு கோழைகள். உயிருக்குப் பயந்த உதவாக்கரைகள். தப்பித்தவறி வாய் திறந் தால் தங்கள் தலைகளும் உருளும் என்ற பயம். அந்தக் குழந்தை மந்திராலோசனைக் குழுத்தலைவன் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தது. ஆம் அது