பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 விக்டர் வியுகோவின் ஆன்ழ்ெல்லோ அவன் மகள். நல்ல அழகிய உருவம். காண்போர் கண்களைப் பறிக்கும் கட்டழகு. தந்தையின் கால் களைப் பிடித்துக் கதறி அழுது கெஞ்சி, நீண்ட நேரம் வாதாடி-தந்தையின் கால்களைக் கண்ணிரால் நனைத்த பிறகே அந்தத் தலைவருக்குச் சற்று இரக்கம் பிறந்தது. அந்த அழகிய கண்களினின்று வழிந்தோடிய கண்ணிரே என் அன்னைக்கு உயிரளித்தது. கோமானே! என் தாய் கட்டவிழ்த்து விடப்பட்டாள். அந்த அழகிய சிறுமிக்கு என்ன கைம்மாறு என் தாயால் செய்ய இயலும். தன் கழுத்திலே இருந்த அந்தப் பித்தளைச் சிலுவையை அவிழ்த்து, அம்மா இதை வைத்துக்கொள்-இது உனக்கு நன்மை செய்யும்' என்று அந்தச் சிலுவையை அந்தப் பெண்ணிடத்தில் கொடுத்தாள். வாயார அந்தப் பெண்ணை வாழ்த்தினாள். சில திங்களுக்குப் பிறகு என் தாய் இறந்துவிட்டாள். நான் பிறகு பணக்காரியானேன். எப்படி, எப்படி, பணக்காரி ஆனேன்?-அது வேறுகதை. என் தாயின் உயிரைக் காப்பாற்றிய அந்தக் கடவுளைத் திரும்பப் பார்க்க வேண்டுமென்று துடியாய்த்துடிக்குதென்னுள் ளம். யார் அறிவார்கள்? இப்பொழுது அவள் நல்ல அழகிய பெண்ணாக இருக்கவேண்டும். ஒருக்கால் என் உதவி அவளுக்குத் தேவைப்பட்டாலும் படலாம். நானும் அவளைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். நான் எங்கெங்கு செல்கிறேனோ அங்கெல்லாம் அவளைத் தேடுகிறேன். பெண்களின் கூட்டத்தைக் கண்டால் என் கண்கள் என்னையும்அறியாமல் அந்த அழகுருவத் தைத் தேடும். இரகசிய போலீஸ்-துப்பறிவோர்யாராரிடமோ இந்த நிகழ்ச்சியைச் சொல்விச் சொல்லித் தேடச் செய்கிறேன். அவளை யார் கண்டு பிடித்துக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பத்தாயிரம் பொன் பரிசளிப்பேன் இன்று மாலை