பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் - r?” வந்து போவதாய் நினைப்பாய். ஆனால் அவர்கள் உன்னிடத்திலிருந்து மனதிலிருந்துகூட அறியவேண்டி யதை அறிந்தே கொள்வார்கள். ஒவ்வொரு நாள் இரவிலும் நான் அடிக்கடித் திடுக்கிட்டெழுந்து படுக்கையில் உட்காருவேன். அறைச்சுவர்களில் நடமாடும் சத்தம் கேட்கும். பார்த்தாயா தீஸ்ப். எந்த நிலையிலும், நான் வாழ்கிறேன். - நான் பது: வுக்குச் சர்வாதிகாரி-எனக்கு மேல் வேனிஸ் - நான் பதுவை அடக்கி ஆளவேண்டுமென்பது கட்டளை. அதுமட்டுமல்ல, கொடியவனாக இருக்க வேண்டு: மென்றும் கட்டளை. என்னிடம் யாராக இருந்தாலும் சரி மன்னிப்புக் கேட்காதே- உயிர்ப்பிச்சைக் கேட்காதே. என் உயிரை வேண்டுமானாலும் உனக் காகக் கொடுப்பேன். ஆனால் வேனிசை மீறி நான் எதையும் செய்யமுடியாது. கொடுமை எவ்வளவு வேண்டுமானாலும் நான் செய்யலாம். மன்னிக்க எனக்கு உரிமையில்லை. நான் ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கப்பட்டு வருகிறேன். ஒரு பூட்டுச் செய்யக் சொல்லி நீ கருமானிடம் உத்திரவிடு. அந்தப் பூட்டு செய்து முடிவதற்குள் அதன் சாவி பதின்மர் குழுவில் இருக்கும். தீஸ்ப்-என்னை நேசிக்கும் நண்பன் - என் வேலைக்காரன், என்னைக் காதலிப்பதாகச் சொல்லும் பெண், யாவரும் என்னை ஒற்றாய். கிறார்கள். தீஸ்ப் : ஐயோ பாவம்! அப்படியா...! ஆன்ழெல் : உன்னைப்பற்றிக் கூறுவதாக நினைக்காதே. நீ தான் என்னைக் காதலிப்பதாக இதுவரையில் கூறியதே கிடையாதே. மீண்டும் சொல்கிறேன். தீஸ்ப் என்னைப் பார்க்கின்ற ஒவ்வொரு கண்னும் பதின்மர் குழுவின் ஒவ்வொரு கண்ணாகவே இருக்கும். கேட்கின்ற காதுகள் ஒவ்வொன்றும் பதின்மர் © (lp. வின் ஒவ்வொரு செவியாகவே இருக்கும். தொடுகின்ற