பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் தீஸ் 芝互 · ப் : ரொதோல்போ- நான் உன்மேல் எவ்வளவு பொறாமையாக இருக்கிறேன் தெரியுமா. ஆம்உன்மேல் எனக்குப் பொறாமைதான்! ஆம்-அவனுங் கூட. அந்த சர்வாதிகாரி வேனிஸ் நாட்டான்-அவனும் பொறாமை கொண்டிருப்பதாகக் கூறுகிறான்பொறாமை கொண்டவனாகக் கற்பனை செய்து கொண்டான். பொறாமை கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது அவனுக்கு, பொறாமையாம் பொறாமை! உண்மையில் பொறாமையாக இருந் தால்-மற்றவைகளைப் பற்றி நினைவு உண்டாகாது. பொறாமை ஒன்றே தலைவிரித்தாடும். பதின்மர் குழு-ஒற்றர் - வேனிஸ் - குடியரசு - குளம்குட்டை இவையெல்லாம் தோன்றாது. பொறாமை ஒன்றே முன் நிற்கும். பொறுத்துக்கொள்ளமாட்டேன். அது எனக்குத் துன்பம் தருகிறது. அவர்கள் உன்னிடம் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது. மற்றொ ருத்தி-ஊகும் வேண்டாம்-வேண்டவே வேண்டாம். அவளைக் கொன்று விடுவேன். நீ ஒருவனே இந்த உலகத்தில் எனக்குற்ற செல்வம். வாழ்வு - மகிழ்ச்சி யாவற்றிலும் சிறந்த ஒன்று. உன்னையன்றி என் உள்ளம் வேறு யாரையும் தீண்டாது. என் இருண்ட வாழ்விற்கு ஒளி தரும் பரிதி நீ. என் விழியின் ஒளி நீ. மற்றவர்கள் பாழ்படுத்திய என் மனத்திற்கு உன் காதல் மகிழ்வூட்டும் மருந்து. உன்னிடத்தில் தனித்துப் பேசும் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு இன்பம் அடைகிறேன் தெரியுமா? நீ எதற்காக இங்கு வந்தாய். - இந்தக் கொடியவனிடையில் நாம் எப்படி வாழ்கி றோம் தெரியுமா? ரொதோல்ப் என் காதலன்!... ஆம்... என் அண்ணன்! நான் உன்னிடம் பேசும் யாவையும் மறந்து விடுகிறேன்-மகிழ்ச்சி வெறி தலைக்கேறி விடுகிறது. நீயே பார், உனக்குத் தெரிய வில்லையா? என் வெறி நிலை, ரொதோல்பே ՇԲ-2