பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ கத்தேரினா : ஒன்றும் தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன். போ-போடிப் போய் துரங்கு போ. தப்ன் : கடவுள் உங்கள் கவலையை மாற்றட்டும். (தன் அறைக்குத் தப்ன் போகிறாள்). - காட்சி-4 கத்தேரினா-ரொதோல் போ-முற்றத்தில் கத்தேரினா : . . (தனியாக) அடடா! என்ன இனிமையான பாட்டு. என் காலடியில் அமர்ந்து இனிய குரலால் பாடிய அந்தப் பாட்டுகள்! இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றனவே! அந்தப் பாட்டுக்களைக் கேட்க என் உயிரைக்கூடத் தருவேனே! அந்த எடுப்பு அடடா"... (அருகிலிருந்த யாழை எடுக்கிறாள்) இதுதானே...ஆம். - (சிறிது நேரம் இசைக்கிறாள்) அந்தப் பாடலைக் கேட்க - ஆம் - கேட்பதற்காக மட்டும் - அவரைப் பார்க்க அல்ல - தொலைவிலிருந் தேனும் அந்தப் பாடலைக் கேட்ட என் உயிரைக்கூட் விற்றுக் கொடுப்பேன். (மறைந்து கொண்டிருக்கிற முற்றத்திலிருந்து ரொதோல்போ பாடுகிறான்). - . பல்லவி - பாட்டு : என்னுயிர் உன்னிதயத தடைக்கலமே! எழில் ஓவியமே! அழகே! கலந்தோம் நாமே! ஆ. பல் : உன்னருகில் வந்து சின்ன குழந்தை போலச் சிணுங்கிச் சிணுங்கிக் கெஞ்சி வட்டமிடும் (எ) சரணங்கள் : வண்ண இசை நீ! மகர யாழ் நானே மலர்ப்புதர் நானே தென்றலும் நீயே! - என்ன என்ன இனிக்கும் முறுவலும் நீதான் இதழ்நான் அழகு நீ காதலும் நானே