பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ கள். வேண்டுமானால் இது என் வேலைக்காரியி னுடைய போர்வை என்றுகூடச் சொல்லித் தப்பித்துக் கொள்வீர். அதுதானே.நீங்கள் சொல்லப் போவதற்கு முன் நான் சொல்லுகிறேன். ஏன் அப்படித்தானே? கத்தேரினா : நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லையே. தீஸ்ப் ! உங்கள் பூஜை அறைதானே அது? சரி நல்லது கதவைத் திறவுங்கள். w கத்தேரினா ஏன்? திஸ்ப் : நான் கடவுளை வணங்கப்போகிறேன். திறந்து விடுங்கள். + கத்தேரினா: சாவி என்னிடம் இல்லை-இழந்துவிட்டேன். தீஸ்ப் : திறந்துவிடுங்கள். - கத்தேரினா : சாவி இல்லையே... தீஸ்ப் : உங்களிடம் இல்லை. உங்கள் கணவரிடம் இருக்கிறது. சர்வாதிகாரியவர்களே! சர்வாதிகாரி யவர்களே! (சர்வாதிகாரியின் படுக்கை அறையை நோக்கி ஓடுகிறாள். கத்தேரினா அவள்முன் சென்று வழிமறிக்கிறாள்.) . . . . கத்தேரினா : வேண்டாம்! வேண்டாம். அந்தக் கதவி னருகில் போகவேண்டாம். நான் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லையே. என் தலைக்குத் தீம்பு தேடுகிறீர்களே. என் மீது உங்களுக்கு ஏதோ கொடுரம் இருப்பதாக வல்லவோ தோன்றுகிறது. இருங்கள்சற்று என்மீது இரக்கம் காட்டுங்கள், ஐயோ! போகிறீர்களே-சற்றுப் பொறுங்கள். ஒரே ஒரு வினாடி. நான் உங்களுக்கு விளக்கிக் கூறுகிறேன். நீங்கள் இங்கு வந்ததுமுதல் நான் மருண்டு விட்டேன். ஏதேதோ சற்றுக் கண்டிப்பான சொற்கள் கூறி