பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 6լ விட்டேன். இருங்கள். சற்றுப்பொறுங்கள். எனக்கு ஒன்றுமே புரிய வில்லையே நீங்கள் ஒரு நடனப் பெண்ணா-எனக்கு உங்களைத் தெரியாதே. சத்திய மாகச் சொல்லுகிறேன். இங்கு யாரும் இல்லை. என்னை நம்புங்கள். ஆம் அந்தத் துப்பறிபவன்தான் இதற்கெல்லாம் காரணம். அந்தக் கொடியவன் உங்களை ஏமாற்றிவிட்டான், அவன் பேச்சை நீங்கள் கேட்கலாமா? சற்றுப்பொறுங்கள். நான் ஒரு பெண்ணல்லவா? பெண்ணுக்குப் பெண் இரக்கங் காட்டக் கூடாதா? ஒரு பெண்ணாக இருந்தால் எனக்கு இரக்கங்காட்டத் தவ்றமாட்டார்களே. பெண்மைக்காகவாகிலும் சற்றுப் பொறுங்கள்! இவ்வளவு அழகு உங்களுக்கு இருந்தும் இரக்க மில்லையே. நான் சொல்வதைக் கேளுங்கள். அந்தத் துப்பறிபவன், அந்த ஈவு இரக்கமற்ற கொடியவன். வஞ்சகன். நான் சொல்வதைக் கேட்டபிறகு என் சாவுக்குக் காரணமாக இருந்த உங்களையே நீங்கள் நொந்துகொள்வீர்கள். என் மணாளரை எழுப்பாதீர்கள். என்னைச் சாவடித்து விடுவார்கள். என் நிலைமையை உணர்ந்தால் நீங்களே வருந்து வீர்கள். நான் குற்றவாளியல்ல. உண்மையை உண்மை யாகக் கூறுகிறேன். ஏதாவது துடுக்குத்தனம் செய்திருக்கலாமே ஒழிய நான் குற்றவாளியல்லநான் தாயற்றவள். தாயற்ற என்மீது சற்று இரக்கங் காட்டுங்கள். அந்தக் கதவினருகில் போகவேண்டாம். உங்களை வேண்டிக்கொள்கிறேன். போகவேண்டாம். திஸ்ப் : முடியாது. ஊகும் முடியாது. உன் வேண்டு கோளை என் செவி ஏற்காது, கோமானே! கோமானே! - - - - - - கத்தேரினா : கூச்சலிடாதீர்கள்-கடவுளே- வேண்டாம் அவர் என்னைக்.கொன்றுவிடுவார். ஒரே ஒரு வினாடி கடவுளை வேண்டிக்கொள்வதற்காகிலும் ஒரு சிறு