பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 7 I ஆன்ழெல் : ஆம் தீஸ்ப். நான் உன்னிடம் பேசவேண்டும். முக்கியமான செய்தியைப்பற்றிப் பேசவேண்டும். என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் எனக்கு வலைவிரிக்கப் படுகிறது. சீ-என் வாழ்வு மிக மோசமானது. எங்கும் எனக்கு ஏமாற்றம். ஒவ்வொரு நாளும் நான் கத்திக்குத்து வாங்கவேண்டும் அல்லது கோடரியால் வெட்டி அமைதி அடையவேண்டும்- ஏன் நீட்டு வானேன்- என் மனைவி என்னை ஏமாற்றிவிட்டாள். அவளுக்குக் கள்ளக்காதலன் ஒருவன் இருக்கிறான். திஸ்ப் : அவன் பெயர்? ஆன்ழெல் : அன்று இரவு என்னைக் கொலைசெய்ய சதி நடந்திருக்கிறது என்று வந்து எழுப்பிச் சொன்னாயே அப்பொழுதெல்லாம் அந்தக் கள்ளக்காதலன் இங்கு தான் இருந்திருக்கிறான். திஸ்ப் : அவன் பெயர்? ஆன்ழெல் : இதைக்கேள்-அது எப்படி எனக்குவிளங்குகிறது தெரியுமா? ஒருவன் - பதின்மர் குழு ஒற்றன் ஒருவன். அந்த ஒற்றர்கள் என்னிடம் நேருக்கு நேர் எதையும் சொல்லமாட்டார்கள். சொல்லுவதற்கு அவர்களுக்கு ஆணை கிடையாது. வேனிசுக்குத் தெரிவித்து அங்கிருந்தே எனக்கு அறிவிக்கப்படும். இதுதான் வழக்கம். அந்த ஒற்றர்களிலே ஒருவன் இன்று காலை ஆற்றோரத்தில் கொலையுண்டு கிடந்தான். காவற் காரர்கள் அவனைப் பார்த்தார்கள். எதற்காக, எப்படி அந்தக் கொலை நடந்தது-யாருக்கும் தெரியாது. அவன் உயிர்விடும்போது தன்னிடமிருந்த ஒரு கடிதத்தை என்னிடம் சேர்ப்பிக்கும்படி காவற்காரர் களிடம் கொடுத்தான். அந்தக் கடிதம் என் மனைவிக்கு அவள் கள்ளக்காதலன் எழுதியது. - - -- திஸ்ப் : அவன் பெயர்?